பீர்க்கங்காய் பொரியல்

தேதி: March 24, 2011

பரிமாறும் அளவு: 3 - 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

பீர்க்கங்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
வெள்ளைப் பூடு - 3 பல்
கருவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி - (பொடியாக நறுக்கியது) 3 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்


 

பச்சை மிளகாயை நீளமாகக் கீறி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
வெள்ளைப் பூடு பற்களை உரித்து, தட்டி வைத்துக் கொள்ளவும்.
பச்சைக் கொத்துமல்லியை, சிறிதாக கட் செய்து கொள்ளவும்.
பீர்க்கங்காயை, தோல் சீவி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும், சீரகத்தைப் போடவும்.
சீரகம் வெடித்ததும், பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பாதி வதங்கியதும், தட்டி வைத்த பூடு, இஞ்சி விழுது, போட்டுக் கிளறவும்.
கருவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லி சேர்த்துக் கிளறவும்.
மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய்த் துண்டுகளை சேர்க்கவும்.
தீயைத் தணித்து வைத்து, காய் மிருதுவாக ஆகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தெளிவான விளக்கங்கள்.. இந்த முறைப்படி செய்துட்டு சொல்கிறேன்.அனைவரும் நலம் தானே?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)