கோதுமை பரோட்டா

தேதி: March 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (20 votes)

 

கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

அகலமான பாத்திரத்தில் மாவு, உப்பு, 2 குழிக்கரண்டி எண்ணெய் போட்டு தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி உருண்டைகளில் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
பலகையில் சிறிது எண்ணெய் விட்டு மாவு உருண்டையை வைத்து மிக மெல்லியதாக தேய்க்கவும்.
பிறகு தேய்த்த மாவை முன்னும் பின்னுமாக மாறி மாறி மடிக்கவும்.
அதனை வட்டமாக சுற்றி அதன் மேல் எண்ணெயை தடவி வைக்கவும். அதே போல் எல்லா உருண்டைகளையும் சுற்றி வைக்கவும்
சுற்றிய உருண்டைகளை சப்பாத்தி பலகையில் வைத்து மெல்லியதாகவும், மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக தேய்க்கவும். (அழுத்தி தேய்க்க கூடாது)
அடுப்பில் நாண் ஸ்டிக் தவாவை போட்டு தேய்த்த பரோட்டாவை போட்டு எண்ணெய் ஊற்றி இருபக்கமும் திருப்பி போட்டு மிதமான தீயில் சுடவும்
சுட்ட பரோட்டாவை பலகையில் வைத்து இரண்டு கைகளால் உள்நோக்கி, அழுத்தமாக தட்டவும் (ஒரு முறை தட்டினால் போதும்). இப்போது கோதுமை பரோட்டா ரெடி மட்டன், சிக்கன் குழம்பு சூப்பர் காம்பினேஷன் வெஜ் குருமா வைத்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

super recipe.i added my favorite list.keep itup.regards.g.gomathi.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி வருகைக்கு மிக்க நன்றி
தமிழில் பதிவிடுங்கள்

பாத்திமா அக்கா பார்க்கும் போதே சூப்பராஇருக்கு நல்லா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

அக்கா நல்ல இருக்கு நான் கண்டிப்பா செய்வேன்

நஸ்ரின் வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றிமா

தேவி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

Super ah iruku, iniku enga vetula idha prepare pani pakka poran

சலாம்மா நலமா...
பார்க்கும் போதே சாப்பிட தோனுகிறதே....
ரொம்ப சூப்பரா இருக்கு......
வாழ்த்துகள்மா...

ஹசீன்

பார்க்கவே சூப்பரா இருக்கு பரோட்டா ஷேப் இருக்கு நீங்க செய்ததில் வாழ்த்துக்கள்..

********

நானும் ட்ரை பண்ணி இருக்கேன் இப்படி ஆனால் எனக்கு இவ்ளோ அழகா வரல பாத்திமா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கோதுமை பரோட்டா சூப்பர் குறிப்பும்மா
எனக்கு நல்லா செய்ய வராதது இந்த டிபன்தான் :(
ஆசைப்படும்போது ஹோட்டலில் சாப்பிடுவது உண்டு..
நல்ல குறிப்பிற்கு வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சூப்பரா இருக்கு பரோட்டா நான் இன்னைக்கு நைட் செய்து பார்த்துட்டு நாளைக்கு வந்து சொல்ரேன் எப்படி இருந்ததுன்னு.

அன்புடன்
ஸ்ரீ

பரோட்டாவைப் பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு சூப்பர் ஆமா சர்க்கரை நோயாளிகளுக்கு வேறு மாவில் செய்யலாமா.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சலாம் ஃபாத்தி அக்கா..,தாங்களும்,வீட்டில் அனைவரும் நலமா..?
கோதுமை பரோட்டா அசத்தலாக இருக்கு அக்கா...
எங்கள் அம்மா வீட்டில் அடிக்கடி இது போன்று செய்வோம்.
கறி குழம்பிற்க்கு சொல்லவே வேண்டாம்.அவ்வளவு நன்றாக இருக்குமே...
உங்கள் படம் ரொம்ப் அழகாக இருக்கு அக்கா...
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரொம்ப சுபெரா இருக்கு..நானும் கண்டிப்பா ட்ரை செய்வேன்
வாழ்த்துகள்..உங்கள் படம் ரொம்ப் சுபெரா சூப்பரா இருக்கு

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

very very nice and simple recipe...keep it up

vazhga valamudan

அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா சுகமா.புராட்டா சூப்பரா இருக்கு. நாங்களும் இப்படித்தான் செய்வோம் உங்களுக்கு எந்த ஊர்.

ஃபாத்திமா அம்மா,
கோதுமை பரோட்டா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.ஃபோட்டோக்களும் தெளிவா இருக்கு.எனக்கு உங்க அளவுக்கு செய்ய வருமானு தெரியல.ட்ரை பண்ணி பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

சுஜி வருகைக்கு மிக்க நன்றி செய்துட்டு சொல்லுங்கள்

வலைக்கும் சலாம்... ஹசினா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

குமாரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அடுத்த முறை செய்யும் பொழுது அழகாக வ்ரும்

இளவரசி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இது ஈசியா செய்திடலாம் செய்துபாருங்கள்

ஸ்ரீ செய்துட்டு கண்டிப்பா வந்து சொல்லனும் வருகைக்கு மிக்க நன்றி

பூங்காற்று சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை மாவில் செய்துகுடுக்கலாம் வருகைக்கு நன்றி

வலைக்கும் சலாம் .....வீட்டில் அனைவரும் நலம் உன் வீட்டில் அனைவ்ரும் நலமா? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

சத்யா நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்கன்றி

சுதா வருகைக்கு மிக்க நன்றி

வலைக்கும் சலாம்.......நான் சுகம் நீங்கள் சுகமா?எனக்கு சொந்த ஊர் விருதுநகர் இருப்பது சென்னையில் வருகைக்கு நன்றி

ஹர்சா சமையல்ல புலியாச்சே!! நீங்கள் இப்படி சொல்லலாமா?ட்ரை பண்ணிபாருங்கள் நல்லாவே வரும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இந்தியாவில் மைதா என்று சொல்வதைத்தான் நாம் இலங்கையில் கோதுமை என்கின்றோம் என நினைக்கின்றேன். அது சர்க்கரை நோயளிகளுக்கு கூடாதல்லவா. நீங்கள் குறிப்பிட்டுள்ள கோதுமை ஆட்டா மா என்கின்றோமே அதுவா ப்ளீஸ் கூறுங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆட்டா வேதான் அது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

ரொம்ப நன்றிங்க

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (நானும் சொல்லலாமா?) :-)

முகப்புல பாத்து உடனே நினைச்சேன், நீங்க தான்னு. இந்த வாரமே பண்ணிட்டு சொல்றேன் மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பாத்திமா பார்க்கும் போதே சூப்பராஇருக்கு நல்லா செய்து இருக்கீங்க.... வாழ்த்துக்கள் பாத்திமா...

ஹமீதா அம்மா,
அழகா செய்து இருக்கீங்க
பரோட்டா எனக்கு செய்ய வராது
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வலைக்கும் சலாம்....
சுகி சீக்கிரம் பண்ணிட்டு சொல்லுடா வருகைக்கு மிக்க நன்றி

சுமதி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கவிதா நீங்க இப்படி சொல்லலாமா? சமையல்ல புலியாச்சே!ஈசிதான் சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

பாத்திமா... சமீபத்தில் ஒரு இடத்துக்கு போனப்போ சாப்பிட்டேன்... செய்து பார்க்கனும்'னு நினைச்சுட்டு இருந்தேன்... நீங்க செய்து காட்டிட்டீங்க... இனி என்ன... செய்து சாப்பிட வேண்டியது தான். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நினைச்சதை செய்துமுடிங்க சரியா? முடிச்சிட்டு வந்து சொல்லுங்கள் வருகைக்கு மிக்க நன்றி

பாதிமம்மா பாத்த அன்னைக்கே செய்துட்டேன் ,இன்னைக்கு தான் சொல்ல முடிந்தது ,நன்றாக இருந்தது ,வாழ்த்துக்கள் நன்றி

மிகவும் அருமையாக இருந்தது தங்களது பரோட்டா ,நான் இதில் முட்டை கழுந்து செய்து இருந்தேன்..வீட்லயே அருமையான ,ஆரோக்கியமான பரோட்டா செய்து அசத்தலாம் ...