கோலா புட்டு

தேதி: May 20, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கோலா மீன் - 10
தேங்காய் துருவல் - ஒரு கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்


 

கோலா மீனை சுத்தம் செய்து, சிறிது உப்பும், மஞ்சள் தூளும் போட்டு, வேகும் அளவு மட்டும் லேசாக தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மீன் வெந்தவுடன் அதன் முட்களை நீக்கி, தயார் பண்ணி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் அத்துடன் போட்டு, இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மீன் கலவையை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.
மீன் முறுக ஆரம்பிக்குபோது, துருவிய தேங்காயை கொட்டி சுமார் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கோலா மீன் வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். சுறா புட்டுதான் சாப்பிட்டு இருக்கின்றேன். கோலா மீனிலும் புட்டு செய்யலாம் என்பது உங்கள் குறிப்பைப் பார்த்த பின்புதான் தெரிகின்றது. இது கோலா மீன் சீசன் என்பதால் எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாட்கள் கோலா மீன்தான். நாளைதான் புட்டு செய்து பார்க்கவேண்டும்.