ஸ்வீட்கான் சிக்கன்சூப்

வழங்கியவர் : kumari.r
தேதி : வெள்ளி, 25/03/2011 - 11:38
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- எலும்பில்லா சிக்கன் - நான்கு துண்டு
- இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
- வெங்காயம் தக்காளி-1+1
- வெண்ணை -1 ஸ்பூன்
- பட்டை கிராம்பு, -தலா இரண்டு
- பெப்பர் பவுடர் - தேவைக்கு ஏற்ப
- உப்பு -தேவைக்கு ஏற்ப
- ஸ்வீட்கான் - 3 ஸ்பூன்
- சோளமாவு- ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி இலை-பொடியாக நறுக்கியது
- சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்..
- ஒரு குக்கரில் வெண்ணை விட்டு பட்டை கிராம்பு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன்கோழி,கான் உப்பு ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்..
- குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் நிறுத்தி..பிரசர் போனதும் குக்கரை திறந்து கான் மற்றும் கோழியை தனியே பிரித்து வைக்கவும்..
- சூப் தண்ணியை வடிகட்டி அதனுடன் சோளமாவை சேர்த்து(சோள மாவை தனியாக கொஞ்சம் தண்ணியில் கலக்கி சூப் தண்ணீரில் சேர்க்கவும்) ஒரு கொத்தி வரும் வரை அடுப்பில் வைக்கவும்..
- பின் அதனுடன் கோழி,கான் சேர்த்து பெப்பர் கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக ஒரு பௌலில் மாற்றி கொடுக்கவும்..
Note:
சூப்புடன் விருப்பப்பட்டவர்கள் சர்க்கரை கொஞ்சம் சேர்த்து குடிக்கலாம்..
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
குமாரி,
நல்ல ஆரோக்கியமான சூப் வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
எனக்கு ரொம்ப பிடித்த சூப் வாழ்த்துக்கு நன்றி கவிதா
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪