ரப்டி நட்ஸ் பிரெட்

தேதி: March 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (8 votes)

 

பிரெட் துண்டுகள் - 6 ( ஓரம் கட் செய்யப்பட்டது )
நன்கு காய்ச்சிய பால் - 2 கப்
வெண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் - 2
முந்திரி - ஒரு தேக்கரண்டி
திராட்சை - ஒரு தேக்கரண்டி
பாதாம் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரட்டின் ஓரங்களை கட் செய்து கொள்ளவும். பாலை நன்றாக சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
ஒரு அடுப்பில் சர்க்கரை பாகு கம்பி பதத்தில் வருமளவு ஏலக்காய் போட்டு காய்ச்சவும்.
மேலும் இன்னொரு அடுப்பில் வாணலியில் வெண்ணெய் போட்டு காய்ச்ச வேண்டும்.
வெண்ணெய் காய்ந்ததும் பிரட் துண்டுகளை போடவும்.
நன்கு கோல்டன் பிரவுன் கலரில் பொரித்து எடுத்து ஆற விட வேண்டும்.
மீதமுள்ள வெண்ணெயில் முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
வறுத்தெடுத்த பிரட் துண்டுகளை சர்க்கரை பாகில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ட்ரேயில் பிரட் துண்டுகளை அடுக்கி அதன் மேல் வறுத்தெடுத்த நட்ஸ்களை தூவவும்.
பால் ஆறியதும் ட்ரேயில் உள்ள பிரட் துண்டுகள் மீது ஊற்றி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் மிகவும் சுவையான டெசர்ட் ரெடி. பிரெட் ஓரளவு ஊறும்படி பால் ஊற்றினால் போதும். இல்லையெனில் பிரெட் மிகவும் ஊறி வடிவம் மாறிவிடும்.

வெண்ணெய்க்கு பதிலாக நெய்யும் பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் நட்ஸ்களை பயன்படுத்தினாலே போதுமானது. பிஸ்தா, டேட்ஸ் பயன்படுத்தினால் இன்னும் சுவைக் கூடும். சர்க்கரை நம் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா சூப்பரா செய்து இருக்கீங்க விளக்க படம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
நானும் செய்து பார்க்கிறேன் எண்ணையில் பிரட்டை பொரிக்க கூடாதா ரம்யா

பானுகமால்

ஹ்ம்ம்ம் பட்டர் வாசனைக்கு, நட்ஸ் போட்டு பிரட் ஹ... ஓஓஒ டேஸ்ட் சாப்பிடாமலே தெரியுதே..... சூப்பர் ரம்ஸ். கலுக்குங்க,வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ம் ம் ஆஹா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கேன் ரம்ஸ் யம்மியா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது. ப்ரெட் வெண்ணெய்ல பொரிச்சாலே செம டேஸ்ட்டா இருக்கும் நான் எப்போது அப்படிதான் சாப்பிடுவேன் இது பால் நட்ஸ்லாம சூப்பர் ரம்ஸ். இன்னைக்கே இப்பவே செய்ய போறேன்.

super recipe . i will try your recipe. keep it up. regards.g.gomathi.

ரம்யா...

இந்த டெஸர்ட் பேரு "ஷாஹி துக்ரா" தானே... நான் அடிக்கடி செய்வேன்... என் வீட்டுக்காரர் எனக்கு சொல்லி குடுத்த முதல் டெஸர்ட் இதுதான்... :) அவர் பேஸ்ட்ரி செஃப்-ஆ இருந்தாலும் இது ஒன்னுதான் நான் அவர்கிட்ட கத்துகிட்டேன்... :)) நட்ஸ் நான் சின்ன சின்னதா கட் பண்ணி போட்டு விடுவேன்...

ரொம்ப அழகா ப்ரெசன்ட் பண்ணிருகீங்க.... ரொம்ப டேஸ்டான டெஸர்ட் இது... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

சூப்பர் ரெசிப்பி..
நான் "டபுள்கா மீட்டா"(ஆந்திரா டெஸர்ட்) செய்திருக்கேன்..கொஞ்சம் அதுபோலவே இருக்கு.நீங்க வெண்ணையில் பொரிச்சுருக்கறதால இன்னும் சுவையா இருக்கும்னு நினைக்கிறேன்...பேர்கூட சூப்பரா இருக்குங்க
படங்களும் மனசை அள்ளுது...
வாழ்த்துக்கள் ரம்யா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

செமையா இருக்கு பார்க்கவே keep it up sister by elaya.g

சூப்பரான ரெசிபி பார்க்க அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்

ரம்யா... ஷாஹி துக்ரா தானே??? சூப்பரா இருக்கு. நான் நெய்யில் வறுத்தும் செய்வேன். படங்கள் தெளிவா அழகா இருக்கு. வாழ்த்துக்கள். கீழ் வீட்டுக்கு போச்சா??? என்ன சொன்னாங்க உங்க தோஸ்த்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்ஸ்,
"ரப்டி நட்ஸ் ப்ரெட்" சூப்பர்.இதுவும் உங்க பார்ட்டியில் கலக்கிய டெஸர்ட்டா? நல்லா இருக்கு.எனக்கு தெரியாத ரெசிப்பிஸ் தர்றீங்க.ஈசியாவும் இருக்கு.கண்டிப்பா ட்ரை பண்ணனும்.வாழ்த்துக்கள்.

குறிப்பு நல்லா இருக்கு ரம்யா. ;)

‍- இமா க்றிஸ்

ரம்ஸ், "ரப்டி நட்ஸ் ப்ரெட்" பார்க்கும் போதே என்னை சாப்பிடு சாப்பிடுன்னு ஒரே ராவடி பண்ணிடுச்சி போங்க. ரொம்ப எளிமையான,சுவையான, அனைவருக்குமே விருப்பமான இனிமையான குறிப்பு ரம்ஸ். இதில் உள்ள பொருள் எல்லாமே கிடைக்கும். அதனால் நாளைக்கே இந்த ராவடிய செய்து குட்டீசுக்கும் தந்துட்டு, நானும் சாப்ட்டு பார்த்துடறேன் பா. வாழ்த்துக்கள். ரம்ஸின் சமையல் குறிப்பு எக்ஸ்பிரஸ் வேகம் பிடிக்க தொடங்கிடுச்சி டோய் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

tks for u r receipe ramya i will try

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ரம்ஸ், எல்லாமே ரெடியா இருக்கு, ஆனால் ப்ரிட்ஜ் தான் இல்லை. பார்ப்போம் ட்ரை பண்றேன். ப்ரிட்ஜிலும் வைக்காமல் அப்படியே ஃப்ரை மாதிரி ட்ரை பண்ணி பார்க்கிறேன் ரம்ஸ். வித்தியாசமா கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள்:)

அன்புடன்
பவித்ரா

ரப்டி நட்ஸ் ப்ரெட் பார்க்கும்போதே சாப்பிட தூண்டுது ரம்ஸ் சீக்கிரமே செய்து பார்க்கிரேன்.. வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்யா சூப்பரான ரெசிபி அருமையாக இருக்கு ஜெட்வேகத்துல போறீங்க சீகிரம் கூட்டாஞ்சோறுல இடம் பிடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ரம்யா சூப்பரான ரெசிபி அருமையாக இருக்கு...

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

பார்க்கவே சூப்பரா இருக்கு. என் மகள் ஸ்கூலுக்கு போக போறாள். Tiffen கொடுத்துவிடுவதற்க்கு சூப்பர் recipe கொடுத்திருக்கீங்க.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி ;)

பானு
ரொம்ப நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.. எண்ணெய்யில் முயற்சி செய்து பாருங்கள்.. ஆனால் இதனுடைய டேஸ்ட் வராது.. ;)

சுகி
நன்றி சுகி.. யம்மி யம்மி தான் ;)

யாழி
கண்டிப்பாக செய்து பாருங்கள் யாழி.. ரொம்ப நன்றி ;)

கோமதி
நன்றி கோமதி.. செய்துட்டு பதிவு போடுங்க ;)

விது
அப்படியா... ;)..
இதற்கு இப்படி ஒரு பெயர் இருக்கா... என் சித்தி செய்வாங்க.. ஆனா இப்படி ஒரு பேரு இருக்குனு அவருக்கே தெரியாது.. ;)ஆத்துக்காரர் செஃப்பா ? சூப்பர் போங்க.. அப்படினா நிறையா குறிப்புகள் நீங்கள் அனுப்பலாமே ;)

இளவரசி
அடடா இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பெயர் சொல்றீங்க.. ரொம்ப நன்றி... சித்தி பூனேவில் இருந்தாங்க.. அதனால வித்த்கியாசமா நிறையா செய்வாங்க.. நீங்க சொல்லி தான் ஆந்திரா டிஷ்னு தெரியுது.. நான் நார்த் சைடுனு நெனச்சேன்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,
சமையலிலும் கலக்குறீங்க
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா சூப்பரா செய்து இருக்கீங்க படம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நல்ல குறிப்பு பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சீக்கிரம் செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள்

இளையா
மிக்க நன்றி ;)

நஸி
ரொம்ப நன்றி.. செய்து பாருங்க..;)

வனி
கீழ் வீட்டுக்கு போகலை.. அவங்க ஸ்வீட் சாப்பிடமாட்டாங்க.. அதுவும் இது பால்ல ஊறி,, சக்கரை பாகுல ஊறினு தொடவே மாட்டாங்க வனி ;) மிக்க நன்றி

ஹர்ஷா
பார்ட்டிக்கு செய்யலைங்க.. கேக் வாங்கிட்டோம். டைம் இல்லை.. கண்டிப்பா செய்து பாருங்க.. ஆனா ஹெல்தியானதுனு சொல்ல முடியாது..

இமா
உங்களுக்கு இல்லை இமா.. ;) நன்றி

கல்ப்ஸ்..
கண்டிப்பா இந்த ராவடியை செய்து பாருங்க.. ரொம்ப ராவடியா தான் இருக்கும்.. ஆனா குழந்த்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டாம்.. ;)

தனா
நன்றி தனா ;)

பவி
பவி.. ஃப்ரிட்ஜ் வேண்டியது இல்லை.. ஆனா ஜில்லுனு சாப்பிட நல்லா இருக்கும்.. இல்லாமலும் செய்து சாப்பிடலாம்.. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வரு
கண்டிப்பா செய்து பாருங்க.. செய்துட்டு பதிவு போட மறக்காதிங்க ;)

ஃபாத்தி
கண்டிப்பா இடம் பிடிக்க முற்சி செய்கிறேன் ஃபாத்தி.. நன்றி ;)

பானு
மிக்க நன்றி பா ;)

ஷங்கரி
நன்றி.. ஆனா இது டிஃபன் மாதிரி சாப்பிட ஏற்றது அல்ல.. வென்ணேய், சக்கரைனு ஸ்வீட் தூள் கிளப்பௌம்.. பாப்பாக்கு அடிக்கடி கொடுக்காதிங்க.. தொண்டை வலி, சலினு வந்திட போகுது..தினமும் குடுக்கறதா இருந்தா சிம்பிளா செய்து கொடுங்க..

கவிதா
சமையலிலும் கலக்கிறீங்க? வேர எதுலயும் நான் கலக்கலயே கவி ;( உங்க பாராட்டுக்கு நன்றி

குமாரி
ரொம்ப நன்றி குமாரி ;)

கல்பனா
கண்டிப்பா செய்து பாருங்க.. ரொம்ப நன்றிங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமா ரம்ஸ்... அவர் செஃப் தான்... Pastry Chef... ;) உங்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்... :)
நான் ஒரு 2 or 3 ரெசிப்பிஸ் அனுப்பினேன்... எதுவும் பப்ளிஷ் ஆகல... :(. அட்மினுக்கு மெயில் அனுப்பி கேட்டும் பார்த்தேன்... பதில் இல்லை... அதனால இப்போ அதுல டைம் வேஸ்ட் பண்ணறது இல்ல... :))

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் ரம்யா சண்டே இந்த டிஷ் செய்தேன்...ரொம்ப நல்லா இருந்தது...என் கணவருக்கும்,மகளுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது...எனக்கு கூட சரியா கிடைக்கலை அதனால்.....வாழ்த்துக்கள் ரம்ஸ்...

ஏதோ தெரியாம மிஸ் ஆயிருக்கும்.. நீங்க இது பத்தி மெயில் அனுப்பி.உங்க செண்ட் ஐட்டம்ல இருந்தா அதையே திரும்பி அனுப்புங்க.கண்டிப்பா வெளியிடுவாங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படியா ரொம்ப நன்றி..அனைவருக்கும் பிடித்தது கண்டு மகிழ்ச்சி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்த டிஷ் செய்தேன்...ரொம்ப நல்லா இருந்தது.Thanks Ramya.

ரம்ஸ் இனிப்பா ஏதாச்சும் சாப்பிடணும்னு தோனுச்சு. உங்களோட இந்த குறிப்பை செய்து சாப்பிட்டாச்சு. ரொம்ப நல்லா இருந்துச்சு. நன்றி ரம்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படியா.. குறிப்பு செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததிற்கு ரொம்ப நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி..அப்படியா.. ரொம்ப நன்றி..
பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)