தேதி: March 28, 2011
பேப்பர் தட்டு – ஒன்று
சிவப்புபெயிண்ட் மற்றும் ப்ரஷ்
பிஸ்தா தோல்கள்
டிஸ்யூ ரோல்
வெள்ளை ஸ்டோன்ஸ்
பெர்மணட் மார்க்கர்ஸ்(பச்சை, கறுப்பு)
க்ளூ
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பேப்பர் தட்டின் வட்டமான நடுப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு மீதி இடங்களில் சிவப்பு வண்ணத்தை ப்ரஷின் உதவியால் தீட்டவும்.

பெயிண்ட் காய்ந்ததும் அதன் நடுப்பகுதியில் இடைவெளிவிட்டு வெள்ளைநிற ஸ்டோனை ஒட்டிக் கொள்ளவும்.

பச்சைநிற மார்க்கரை பிஸ்தா தோல்களின் மீது தீட்டவும்.

இந்த பச்சைநிற பிஸ்தா தோலை ஒட்டி வைத்துள்ள ஸ்டோனை சுற்றி பூப்போல் ஒட்டவும்.

அடுத்து கறுப்புநிற மார்க்கரை கொண்டு பிஸ்தா தோல்களில் தீட்டவும்.

பெயிண்ட் செய்யாமல் விட்டு வைத்திருக்கும் நடுப்பகுதியில் போட்டோவை ஒட்டவும். அதன் ஓரத்தை சுற்றி கறுப்புநிற பிஸ்தா தோலை ஒட்டவும்.

விருப்பபட்டால் சில பிஸ்தா தோல்களை அப்படியே பூக்களுக்கு நடுவில் விரும்பிய வடிவில் இதுபோல் ஒட்டிக் கொள்ளலாம்.

ஒரு டிஷ்யூ ரோலில் இந்த போட்டோவை ஒட்டி நிற்க வைக்கவும். அழகான பேப்பர் தட்டு போட்டோ ஸ்டாண்ட் ரெடி.

இளவரசியின் ஏழுவயது மகளான சுஷாந்தி அறுசுவை நேயர்களுக்கு செய்து காட்டிய எளிய கைவண்ணம் இது.

Comments
சுஷாந்தி
very nice ALL THE BEST Kutti
Sushanthi
simply super craft.keep it up.your photo smileing also so nice.regards.g.gomathi.
wow...
wow very nice da kutti.... Congrats..
SubhaLogachandran
சுஷாந்தி
சுஷாந்தி.... ரொம்ப கியூட்டா, சூப்பரா செய்திருக்கம்மா. நீயும் ரொம்ப அழகா சிரிக்கிற. இன்னும் நிறைய இது போல் செய்து எங்களை அசத்தனும்... சரியா? வாழ்த்துக்கள்டா கண்ணா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஷாந்தி
ஹை! சுப்...பர் க்ராஃப்ட். அழகா இருக்கீங்க சுஷாந்தி. அழகா சிரிக்கிறீங்க. ;) முகப்பில் பார்த்ததுமே மனசு சொல்லிச்சு, இது இளவரசி வீட்டுக் கைவேலை என்று. பாராட்டுக்கள் குட்டிப்பெண்ணே. இன்னும் நிறைய க்ராஃப்ட் பண்ணி அனுப்புங்க.
- இமா க்றிஸ்
நல்ல திரமமையான வேலை உன் திறமை
நல்ல திரமமையான வேலை உன் திறமை மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் சுஷாந்தி by elaya.G
நன்றி
என் மகளின் இந்த எளிய கைவினையை அழகான பெயரோடு வெளியிட்ட
அறுசுவை குழுவிற்கு என் நன்றி..
வாழ்த்து சொன்ன தோழிகள் சங்கீதா,கோமதி,சுபா,வனிதா,இமாம்மா.இளையா அனைவருக்கும் நன்றி
என் மகள் படித்தாள்...தமிழ் தட்டச்சு செய்ய சிரமப்பட்டதால் நான் பதில் போடுகிறேன்..
இமாம்மா உங்களின் எதிர்பார்ப்புள்ள கைவினை விரைவில் பண்ண சொல்லி அனுப்புகிறேன்..:-)..
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
Very Nice God Bless u
Very Nice God Bless u
சுஷாந்தி
சுஷாந்தி ரொம்ப அழ்கா செய்துருக்கேடா உன் சிரிப்பும் கொள்ளை அழகு இன்னும் நிறைய செய்து அனுப்பனும் வாழ்த்துக்கள்டா குட்டி
சுஷாந்தி,
சுஷாந்தி,
ரொம்ப அழகா செய்து இருக்கீங்க
மேலும் பல crafts செய்யுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்!!!!
என்றும் அன்புடன்,
கவிதா
பேப்பர் தட்டு போட்டோ ஸ்டாண்ட்,
சுஷாந்தி,
உங்க பெயர் போலவே நீங்களும் அழகு,உங்க கை வேலையும் அழகு.ரொம்ப நீட்டா,நல்லா செய்து இருக்க டா.இன்னும் நிறைய கைவேலைகள் செய்து அனுப்ப வாழ்த்துக்கள்.
இளவரசி,
உங்க ட்ரெய்னிங்கா?சூப்பர்.
it's very nice keepit up.
it's very nice keepit up.
kutty
miga arumaida thangam...chinna vayasula romba alagana thiramai... inum ithu pola neraiya pana vaalthukal....
By
D.Kodi
சுஷாந்தி!
வாவ் சுஷாந்தி குட்டி சூப்பர்டா! அழகா செய்திருக்கீங்க! இளவரசி பொண்ணாச்சே! இன்னும் நிறைய செய்து அசத்துங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சுஷாந்தி
சுஷாந்தியும் அழகு, சுஷாந்தி கையால செய்த க்ராஃப்ட்டும் அழகு. (குட்டி பாப்பாவ இருக்கற சுஷாந்தி கண் ரொம்ப அழகா இருக்கு.) பிஸ்தா தோலுக்கு பதிலா நிலக்கடலை தோல் வைச்சு செஞ்சு பார்க்குறேன் சுஷா.
சுஷாந்தி
சுஷாந்தி டியர் ரொம்ப சூப்பரா செய்திருக்கீங்க டா. இன்னும் நிறைய நிறைய க்ராப்ட் செய்து காமிக்கிறியா எங்களுக்குலாம் உன்கிட்ட இருந்து நாங்க கத்துக்கறோம். all the best da shushanthi. உன் பேரு கூட உன்ன மாதிரியே அழகா இருக்குமா. ஆமாம் அந்த ப்ரேம் உள்ள இருக்கற பாப்பா யாரு நீ தானா சின்ன வயசுல?
நன்றி
வாழ்த்து சொன்ன சையத்,பாத்திமா,கவிதா பொற்கொடி,காமினி,கவி ,யாழினி ,ஹர்ஷா,வினோஜா,அனைவருக்கும்
மிக்கநன்றி
கவி எப்படி இருக்கீங்க....என் பொண்ணா இருந்தும் க்ராப்ட் பண்ணறாளே எப்படின்னு ஆச்சரியப்படுங்க....:-)
ஹர்ஷா நான் சொல்லி கொடுக்கறதா ..இல்லீங்க ..:-)
ஏன்னா எனக்கு சுட்டுபோட்டாலும் வராது:(
வினோஜா..நிச்சயம் முயற்சி பண்னி பாருங்க,நன்றி
யாழினி அந்த போட்டோல இருக்கறதும் அவதான்..கரெக்டா கண்டுபிடிச்சுருக்கீங்க
நன்றி
உங்கள் அனைவரின் பாசமிகு பின்னூட்டம் சுஷாந்திக்கு மகிழ்ச்சியையும் எனக்கு நெகிழ்ச்சியையும் தருகிறது..மிக்க நன்றி
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
சுஷாந்தி
சுஷாந்தி, ரொம்ப அழகா செய்து இருக்கீங்கடா...வாழ்த்துக்கள் குட்டிமா....
நன்றி
சுமதி உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க..
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
சுஷாந்தி
ஹய் ஒரே குட்டீசா வந்து கலக்குறாங்க,பேப்பர் தட்டு போட்டோ ரொம்ப அழகா இருக்கு,சுஷாந்தி கிற பேர் ரொம்ப நல்லா இருக்கு உன்னைப்போலவே....