பூண்டு, வெங்காய காரக் குழம்பு

தேதி: May 21, 2006

பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உரித்த சி. வெங்காயம் - நூறு கிராம்
உரித்த பூண்டு பல் - ஐம்பது கிராம்
தக்காளி - நான்கு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காயளவு
எண்ணை - ஐந்து டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
அரைக்க:
வர மிளகாய் - பத்து
மல்லி - இரண்டு டீ ஸ்பூன்
தேங்காய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - அரை டீ ஸ்பூன்
மிளகு - பத்து


 

முதலில் அரைக்க வைத்துள்ள சாமான்களை வாசனை வர வறுத்து விழுதாக அரைக்கவும்.
புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி, அரைத்த விழுது சேர்த்து அரை லிட்டர் நீரில் கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணையை மட்டும் ஊற்றி வெந்தயம் தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
லேசாக சிவந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
எண்ணை பிரிய தொடங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்து கெட்டியாகி எண்ணை மேலே மிதக்கத் தொடங்கியதும் இறக்கி விடவும்.
சிறிய வாணலியில் மீதமுள்ள இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி மூடவும்.


மேலும் சில குறிப்புகள்