கருணைக்கிழங்கு மசியல்

தேதி: March 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருணைக்கிழங்கு - 250 g
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க


 

கருணைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் (ரொம்பவும் வதங்கக் கூடாது) மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்க்கவும்.
ஒரு பிரட்டு பிரட்டி கரைத்துவைத்துள்ள புளியை சேர்க்கவும்.
புளி கொதித்ததும் உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு உப்பு சரிபார்த்து அணைக்கவும்.
சுவையான மசியல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்