கோஸ் மல்லி

தேதி: March 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

விதை கத்திரிக்காய் - 2 பெரியது
உருளைக்கிழங்கு - 1 சின்னது
பெ.வெங்காயம் - 1 நீளவாக்கில் அரிந்தது
தக்காளி - 1 நீளவாக்கில் அரிந்தது
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ப.மிளகாய் - 1

தாளிக்க :
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 பின்சு
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி இழை - சிறிதளவு


 

கத்திரிகாய்,உருளை நல்லா வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளி சிறிது உப்பு போட்டு நல்லா வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நல்லா கொதிக்க விடவும்.
பின்னர் மசித்த கத்திரி,உருளை கலவை போட்டு சிறிது புளி தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு போட்டு நல்லா கொதிக்க விடவும்.
இறக்கிய பின் மல்லி இழை போட்டு வைக்கவும்.


செட்டிநாட்டு பக்கம் இட்லி,தோசை,இடியாப்பத்திற்கு ஏத்த சைட் டிஷ்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பிடித்தமான பகுதிகள். பயனுள்ள செய்திகள்.