வாழைப்பழ அப்பம்

தேதி: March 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (9 votes)

 

வாழைப்பழம் - ஒன்று (பெரிதாக)
மைதா - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
வெல்லம் தூள் - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - இரண்டு
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் தூள் வெல்லத்தை போட்டு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.
வாழைப்பழத்தை நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, சோடா உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதில் மசித்த வாழைப்பழத்தை போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் வெல்ல பாகையும் வடிக்கட்டி ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கட்டித் தட்டாமல் கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், ஒரு ஸ்பூன் நிறைய மாவு எடுத்து மெதுவாக ஐந்து வரை எண்ணெயில் ஊற்றி சிவந்ததும் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான சூடான வாழைப்பழ அப்பம் தயார் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எண்ணெய் உறிஞ்சும் என்பதால் நான் கொஞ்சம் கெட்டியாக மாவை கரைத்தேன் எனது குழந்தையும் விரும்பி சாப்பிட்டாள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகான குறிப்பு செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் by elaya.G

Super sweet recipe. i will try your recipe. keep it up,regards. g.gomathi.

ருக்சனா அப்பம் நானும் இப்டி செய்வேன்,ஆனால் அரிசி மாவு சேர்க்க மாட்டேன், அரிசி மாவு சேர்த்தால் கிறிஸ்பியா வரும்னு நினைக்கிறன்,செய்து பார்த்துட்டு சொல்றேன் .வாழ்த்துக்கள்

ருக்ஸானா மேடம்,

சுவையான,சத்தான குறிப்பு

மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இது என்னோட ஃபேவரிட் டிஷ்.. ;)
அடுத்த நாள் சாப்பிட சுவையாக இருக்கும்..
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர் ரெசிபி...
கண்டிப்பா செய்துப்பார்க்கனும்..
எங்கே கொஞ்ச நாளா ஆளையே காணும்..

ஹசீன்

supera iruthuchu...

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ருக்சனா... நேத்தே இதை செய்யனும்னு வாழைப்பழம் எடுத்து வெச்சேன்... மறந்து போய் நானே சாப்பிட்டுட்டேன் ;( இன்னைக்கு வாங்கிட்டு வரும் பழத்தையாவது நியாபகமா எடுத்து வெச்சு நாளைக்கு செய்யனும். பார்த்தா ஆசையா இருக்கு... என் குட்டீஸ்க்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Its really nice....

எங்க அம்மா கூட இப்படிதான் செய்து கொடுப்பாங்க ஆனா அரிசி மாவு சேப்பாங்காலான்னு தாண் எனக்கு தெரியல மாலை ஸ்நாக்ஸ் மாதிரி கொடுப்பாங்க ரொம்பவே நல்லா இருக்கும் சூப்பர்.

அன்புடன்
ஸ்ரீ

ருக்சனா... இன்று இதை செய்தாச்சுப்பா. இது போல் தங்கை செய்வாளாம் ஆனால் அரிசி மாவு இல்லாமல் வெறும் மைதா பயன்படுத்துவாள். இது இன்னும் க்ரிஸ்பினஸோட ரொம்ப சுவையா இருந்தது. வீட்டில் எல்லாருக்கும் பிடித்தது. மிக்க நன்றி ருக்சனா. இனி தங்கை எப்பவும் அரிசி மாவு சேர்ப்பா... அவளுக்கு பிடிச்சு போச்சு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழைப்பழ அப்பம்!!! ரொம்ப சூப்பரா இருந்தது.... செய்வதும் ரொம்ம்ம்ப சுலபமா இருந்தது, நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் அப்பம் செய்றேன், என்னாலயே நம்ப முடியல,அவ்வளவு சுவையா இருந்தது. இதில் மிக முக்கியமான விஷயம் என் குட்டி பொண்ணுக்கு ரொம்ப பிடிச்சது தான்.சாதரணமாகவே எந்த புதிய உணவையும் விரும்பவே மாட்டா, ஆனால் உங்க வாழைப்பழ அப்பத்தை வேண்டாம்னு சொல்லாம நல்லா சாப்பிட்டா,அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.... நல்ல குறிப்பு கொடுத்ததற்கு நன்றி!!!

அனேக அன்புடன்
ஜெயந்தி