பனீர் பிரியாணி

தேதி: March 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (17 votes)

 

பாசுமதி அரிசி - 2 டம்ளர்
பனீர் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி (குவியலாக)
பட்டை கிராம்பு ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
கல்பாசி இலை - சிறிது
ஏலக்காய் கிராம்பு தலா - 3
பட்டை - சிறு துண்டு
எலுமிச்சை - பாதி பழம்
புளிக்காத தயிர் - ஒரு குழிக்கரண்டி
பச்சை பட்டாணி - சிறிது (ஒரு கைப்பிடி அளவு)
மல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
நெய் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

தக்காளி, வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், பச்சை பட்டாணி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தயிர் சேர்த்து கிளறி விட்டு 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசியை போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைத்து புதினா, மல்லி இலை, லெமன் சாறு, நெய், பனீர் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்
ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி வைக்கவும்.
சுவையான பனீர் பிரியாணி ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது என்னுடைய ஃபெவரைட்..........

ஹாய் அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் பனீர்ல பிரியாணியா ரொம்ப வித்தியாசமா இருக்குக்கா இன்ஷாஅல்லாஹ் முடியும் போது செய்து பார்த்து சொல்லுறேன்கா வாழ்த்துக்கள்

பிரியாணி பார்க்க சூப்பரோ சூப்பர். விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன். பனீர் வீட்டுல செஞ்சா இந்த மாதிரி துண்டா எல்லாம் வரமாட்டுதே. இதுமாதிரி எப்படி பனீர் தயாரிக்கறது சொல்லமுடியுமா?.

பாத்திமா... சம சூப்பரா இருக்கு. நான் வறுக்க மாட்டேன் அப்படியே சேர்பேன். இது சூப்பரா இருக்கு கலரா.... கண்டிப்பா ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா இருக்கு பாத்திமா..பனீர் பிரியாணி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பாத்திமா, ரொம்ப சூப்பர் ர இருக்கு.ஓட்டு கூட போட்டுட்டேன். வாழ்த்துக்கள்....

உன்னை போல பிறரையும் நேசி.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வலைக்கும் சலாம் .........நஸ்ரின் முடியும்போது செய்துட்டு சொல்லுடா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வினோ பனீர் கடையில் வாங்கியது வீட்ல இப்போ செய்றது இல்லை கடையில்தான் அழகா கிடைக்குமே விருப்பபட்டியில் சேர்த்தாச்சா மிக்க நன்றி

வனி வறுத்துட்டு செய்துபாருங்கள் சூப்பரா இருக்கும் வருகைக்கு மிக்க நன்றி

குமாரி செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஹாய் தேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி(ஒட்டு போட்டதுக்கும்)

hello mam, your panner briyani ia different recipe.. but for me , when i fry the panner in oil ,it gets broken into pieces.. please tell me what to do to fry panner as beautiful cubes..

சூப்பரான வெஜ் ரெசிபி குடுத்து இருக்கிங்க.. பார்க்கவே சூப்பர்.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா அம்மா,
பனீர் பிரியாணி இதுவரை செய்தது இல்லை.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

ஹேமலதா பனீர்ரை ரூம் டெம்ரேச்சருக்கு கொண்டுவந்து ஓர் அங்குல துண்டாக
கட் பண்ணிஃப்ரை பண்ணுங்கள் வருகைக்கு மிக்க நன்றி பதிவுகளை தமிழில் கேளுங்கள்

ரம்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஹர்ஷா இனி செய்துபாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

வித்தியாசமான குரிப்பு கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்கிரேன் நன்றிகள்.

அன்புடன்
ஸ்ரீ

எனக்கு rice receipe பிடிக்கும். இந்த பனீர் என்கிறது என்னது?

சூப்பரா இருக்கு. பனீர் பிரியாணி இதுவரை செய்ததில்லை,கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
வாழ்த்துகள்மா..

ஹசீன்

ஹமீதா அம்மா,

நல்ல சுவையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்ரீமதி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அனு பனீர்(பால்ல செய்வது) பாலாடைகட்டி கடைகளில் பனீர்ன்னு கேட்டால் குடுப்பாங்க வருகைக்கு நன்றி

ஹசினா கண்டிப்பா செய்துட்டு சொல்லனும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

கவிதா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

பாத்திமா இன்று எங்க வீட்டில் இது தான் சமையல்... ரொம்ப அருமை. அந்த கல்பாசி இலை மட்டும் எனக்கு தெரியல, அதை சேர்க்கல. மற்றபடி ரொம்ப சுவை. சூப்பர். எல்லாருக்கும் பிடிச்சது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi,
Paneer Biriyani parthale super...na nalaike try panren...

வனி ரொம்ப சந்தோசம் வனி சீக்கிரமே செய்துட்டிங்களே கல்பாசி இலை சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் நாந்தான் லேட்டா பதிவுபோட்டு இருக்கேன் இன்றுதான் பார்த்தேன் சாரி வனி

வேணி சாரிப்பா இப்போதான் பார்த்தேன் நீங்க சீக்கிரம் பண்ணிட்டு சொல்லுங்கள்
வருகைக்கு மிக்க நன்றி

vry nice madam.one doubt fr me.1 pocket means 250 gm?

sankari

பன்னிர் பிரியாணி செய் முறையில், மஞ்சத்துள், மிளகாய் தூல் எப்ப போடவேன்ன்டும் ?