ரவை கேசரி

தேதி: April 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (10 votes)

 

ரவை - ஒரு கப்
சீனி - ஒரு கப்
பால் - 2 1/2 கப்
முந்திரி - 15
பட்டை - 1
ஏலக்காய் - 3
நெய் - 6 தேக்கரண்டி (தேவைக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
புட் கலர் (ஆரஞ்ச்) - ஒரு பின்ச்


 

கேசரி செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரவையை வெறும் வாணலியில் வறுக்கவும். சிறிது சூடு ஏறியதும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி வறுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு ஏலக்காய், பட்டை, முந்திரி சேர்த்து வறுக்கவும்.
அதில் பாலை சேர்த்து அத்துடன் நீரில் கலக்கிய கலரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதித்த பின் தீயை சிம்மில் வைத்து சிறிது உப்பு (இனிப்பு சுவையை எடுத்துக் கொடுக்க) மற்றும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே கிளறவும். அடி பிடிக்காமல், கட்டி பிடிக்காமல் கவனமாக கிண்டி விட்டு ரவை வெந்ததும், பால் முழுவதும் வற்றியதும் இறக்கவும்.
கீழே இறக்கியதும் அல்லது அடுப்பை அணைத்ததும் சீனியை கொட்டி கிண்டவும்.
சுவையான பால் ரவா கேசரி தயார்.

தேங்காய் என்ணெய் சேர்ப்பதால் கூடுதலாக நறுமணம் கிடைக்கும். சீனியை முதலிலேயே சேர்த்தால் ரவை வேக நேரமெடுக்கும். அதனால் தான் கடைசியில் சேர்க்கிறோம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஆமினா ரவை கேசரி வித்தியாசமா இருக்கு. இந்தியாதான் கப் வாங்க போகுது முன்கூட்டியே ஸ்வீட் செஞ்சு அனுப்பிட்டீங்களா வெரி குட். சீனியை கடைசியில் சேர்க்கறதுனால பாகு இளகி பிசுப்பிசுப்பா ஆகாதா ஆமினா. சாதாரணமா செய்யற கேசரிக்கும், இதுக்கும் என்ன வித்தியாசமுனு கண்டுப்பிடிக்கனும் அதுக்கு இன்னைக்கு செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.

அன்பு ஆமினா

கேசரி மிகவும் சுவையாக இருக்கிறது..நல்லா வரும் என்ற நம்பிக்கையில் செய்தேன் நல்ல மணமாக இருக்கிறது..எங்க வீட்டு கெஸ்ட் கூட சூப்பரா இருக்கு என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்

ஆமினா... போன வாரம் தான் நான் எங்க வீட்டில் பண்ணேன். பால் ரவா கேசரி. வீட்டில் எல்லாரும் அருமைன்னு சோன்னாங்க... கலர் இல்லாததால் படம் எடுக்கல. இன்னைக்கு உங்க குறிப்பை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு... அழகா இருக்கு. இன்னொரு முறை உங்களுக்காக செய்துடறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தியா கோப்பை வென்றதுக்கு உங்களின் ஸ்வீட் சூப்பர் அமினா நாளைக்கே செய்துட்டு சொல்லறேன்.வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஆமி,
என் தோழியும் இப்படிதான் கேசரி செய்வாங்க.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

Nice

ஒரு வார்த்தை கவிதை "நீ"

ஆமினா

கேசரி பார்க்கும்போதே தொண்டை வரை இனிக்குது. கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

hello all of you
this site is very useful for all
this is my favorite site in web.
congrats for the team
wishes
vanathi

அன்புள்ள தோழிக்கு
உங்கள் முறைப்படி என் குழந்தையின் பிறந்த நாளன்று ரவா கேசரி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மிகவும் நன்றி.

தேன்மொழி செந்தில்குமார்.

"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்

சூப்பர் போங்க!!! செம டேஸ்ட்.3 ப்ளேட் சாப்பிடேன்.thank you so much for the receipe.

"The best way to cheer yourself up is to try to cheer somebody else up."

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்க யம்மி கேசரி சூப்பர் 28/12 இன்று என் மகள் பிறந்த நாள் காளையில் முதலில் செய்தது கேசரி தான் மிச்சம் வைக்கலை once more கேட்டு சாப்பிட்டா

Today is my wedding day. Rava kesari seidhen.. nandraga vandhadhu..thank u very much..