cooling glass

hi ,

கண்ணுக்கு குளீர்சியாக cooling glass வாங்கலாம் என்று நினைக்கிறேன்.
எந்த brand வாங்கலம்.அதில் கவனிக வேண்டிய ஏதெனும் உள்ளதா.

அதிகM இதுபற்றி தெரிந்து கொண்டதில்லை..ஆனால் யூ வீ ப்ரொடெக்ஷன் இருப்பதாக வாங்கவும்..அதன் ஃப்ரேம் உங்களுக்கு தகுந்ததாக வாங்கவும்.அதிக எடை இல்லாமல் இருப்பதாகவும் வாங்கவும்...அதிகம் வெயிலில் போபவராக இருந்தால் கொஞ்சம் நல்லாவே கண்ணை மறைக்கும்படியாக வாங்கவும்..உங்கள் நிறத்துக்கு தகுந்த மாதிரி பார்த்து வாங்கவும்
RAY BAN,GUCCI,DIOR,ARNETTE போன்றவையில் நல்ல SUNGLASS கள் இருக்கும்

சுகன்யா... சொல்ல வேண்டிய பாதியை தளிகா சொல்லிட்டாங்க. இருந்தாலும் சொல்றேன்:

1. பெரிய லென்ஸ் உள்ளவை கண்களை நன்றாக மறைத்து கண்னை பாதுகாக்கும்.

2. லென்ஸ் கலர் உங்க சருமத்துக்கு ஏற்ரபடி இருக்கட்டும்.

3. ஸ்போர்ட்ஸ் டைப் வரும்... அவை போட்டுக்கொண்டு ஓடினாலும் போட்டபடியே இருக்கும். நல்லா முகத்தில் பொருந்தும். அதில் "Nylon" ஃப்ரேம் வரும். அதனால் எளிதில் உடையாது.

4. போட்டு பார்த்து வாங்குங்க, ஃப்ரேம் உங்க முகத்தில் முக்கியமா மூக்கிலோ, காது பக்கத்திலோ அழுத்தம் கொடுக்க கூடாது. அழுத்தம் கொடுத்தால் வெகு நேரம் போட்டிருக்கும் போது தழும்பு போல் ஆகி கருப்பாகும். மார்க் வந்துவிடும்.

5. டிசைனர் கண்ணாடி என்ற பெயரில் கோல்டன், சில்வர், கல் வைத்தது போன்ற வேலைப்பாடுகள் உள்ளவை வருகின்றன... அவற்றை தவிர்ப்பது நல்லது. அவை என்றும் பேஷனாக இருக்காது, கூடவே சில நேரம் வெளுத்தோ, கருத்தோ, கல் விழுந்தோ போய் கண்னாடியின் அழகையே கெடுத்து விடும்.

6. ஸ்க்ரேச் ஆகாத கண்ணாடிகள் வரும்... அதை வாங்கினால் கோடுகள் விழாமல் கண்னாடி எப்போதும் தரம் குறையாமல் கண்களை பாதுக்காக உதவும்.

7. கண்ணாடி “UV” மற்றும் “Blue Light” வில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க வேண்டும். நல்ல கண்னாடி 99 முதல் 100% வரை அவற்றை ரெஃப்லெக்ட் செய்யவோ ஃபில்டர் செய்யவோ செய்யும். அதை வைத்தே அந்த கண்ணாடியின் தரம் உள்ளது.

8. “Polarised” கண்ணாடிகள் வாங்கலாம். அவை glare அடிக்காமல் நீங்கள் எந்த வெளிச்சத்தையும் பார்க்க உதவும். வெய்யிலில் தகடை பார்த்தால் கூட glare அடிக்காது. நீரில் உள்ளவற்றை கூட பார்க்க இவை உதவும்.

9. ஃப்ரேம் கண்ணின் ஓரங்களை மறைப்பது போல் இருந்தால் நல்ல பாதுகாப்பாக இருக்கும்.

10. லென்ஸ் நிறம் பொருத்து கண்ணாடியின் தரமும் சில ப்ராண்டுகளில் வேறுபடும். அதனால் அதையும் கேட்டு வாங்குங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks Pa .

tell me rate's if possible.

சுமார் 4000 - 5000 ரூபாய்க்கு நல்லது கிடைக்கும்

Thanks pa

HI SUGANYA NALLA IRUKINGALA

நான் நல்லா இருகிறேன்.

நீங்க எப்படி இருகிங்க?

எல்லொருக்கும் என் வாழ்துக்கல் .. எல்லொரும் சுகமா ?

மேலும் சில பதிவுகள்