வெங்காய வத்தக்குழம்பு

தேதி: April 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.8 (4 votes)

 

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பூண்டு - 1 (சுமார் 20 பல்)
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
சாம்பார் பொடி - 21/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அள்வு
வெல்லம் - ஒரு சிறு துண்டு

தாளிக்க

கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
நல்லெண்ணை - 2 குழி கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்று ஒன்றாக போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின் புளியை கரைத்து ஊற்றவும்.

புளி, பொடி வாசனை போனதும் வெல்லம் சேர்த்து எண்ணை பிரியும் வரை கொதிக்க விடவும். சுவையான வத்தக்குழம்பு ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு.பார்த்தாலே நாக்கில் ஊத்து கிளம்புது.லீவில் ஊருக்கு போகும்போது நானே அல்லது மனைவி ஜன்னத் மூலம் செய்து பார்த்துவிட்டு இன்னொரு பதிவு போடுகிறேன்.ஓக்கே வா.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் சார்

டபுள் ஓ.கே. நம்ம தஞ்சாவூர் பிள்ளைமார் வீட்டு சமையல் தான் சார்
ஜமாய்ங்க. அவசியம் டேஸ்ட் பண்ணிட்டு பதிவிடுங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுமேம் வெங்காயகுழம்பு படிக்குபோது சாப்பிட்ட பீஃலீங். உங்களோட கோதுமை அடை எங்கவீட்டுல அடிக்கடி செய்யக்கூடிய ரெசிப்பியாகி விட்டது. நல்ல ரெசிப்பி எல்லோருக்கும் உங்களோட அடை செய்முறையை சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த குழம்பு வெங்காயத்த பொடியா நறுக்கி சேர்த்து இருக்கீங்க.தாளிப்புல துவரம்பருப்பு, சீரகம் சேர்க்கறது வித்தியாசமா இருக்கு. எப்படி இருக்குனு ட்ரை பண்ணிப்பார்க்குறேன். உங்க சமையல் சூப்பராதான் இருக்கும்.

வினொ
ரொம்ப நன்றி. இதையும் முயற்சி பண்ணி பாருங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு உங்கள் வெங்காய வத்தக்குழம்பு இன்று செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது நல்ல குறிப்பு குடுத்திருக்கீங்க நன்றி

நன்றி பாத்திமா மேம்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு