வாழைப்பழத் தோசை

தேதி: May 24, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை அரிசி (சாதாரண அரிசி) - ஒரு கப்
பழுத்த வாழைப்பழம் - 5 (நடுத்தரமான அளவில்)
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5-6 (ருசிக்கேற்ப)
உப்பு - தேவையான அளவு


 

அரிசியை சுமார் ஒரு மணி நேரம் நன்கு ஊறவைத்து பிறகு நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியுடன் மசித்த வாழைப்பழம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் இட்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் நான்-ஸ்டிக் தவா ஒன்றினை வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் தடவவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மாவினை தோசைகளாக ஊற்றி, மூடி வைத்து வேகவிடவும்.
தீயின் அளவு மிதமாக இருக்கவேண்டும். இது சீக்கிரமே வெந்துவிடும்.
தோசையைத் திருப்பிப் போட்டு ஒரு நிமிடம் வேகவிட்டு எடுத்துவிடவும்.
இந்த தோசைகள் பார்ப்பதற்கு வெந்நிறமாகவும், சாப்பிட மிருதுவாகவும் இருக்கும்.
வாழைப்பழம் சேர்ப்பதினால் இந்த தோசைகள் மிகவும் மிருதுவாக இருக்கும்.
பச்சை மிளகாய் சேர்ப்பதினால், வாழைப்பழத்தின் இனிப்பு சுவை தெரிவதில்லை.


இதனை உருளைக்கிழங்கு காரட் கறியுடன் பரிமாறவும். பச்சைமிளகாய் சேர்த்து செய்யப்படும் வாழைப்பழத் தோசை இது. இந்த தோசையை எண்ணெய் இல்லாமல் தயாரிக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சித்ரா-வாழைப்பழத் தோசை, கேள்வி பட்டு இருந்தேன்.இப்போதுதான் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.சுவையாகவும் இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடார்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.