உருளைக்கிழங்கு காரட் கறி

தேதி: May 24, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நடுத்தரமான உருளைக்கிழங்குகள் - 3
வெங்காயம் - 2
காரட் - 3
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 3
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
<b>அரைப்பதற்கு</b>
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 5-6
தர்பூசணி விதைகள் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை சதுரத்துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தர்பூசணி விதைகளை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.
இஞ்சி பூண்டினை தனியே அரைத்துக் கொள்ளவும். தர்பூசணி விதைகள், தேங்காய், கசகசா ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ப்ரெஷர் பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டைப் போடவும்.
பிறகு அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வாசனை வர வதக்கவும்.
பின்னர் நறுக்கின காய்கள், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தேவையான உப்பையும் சேர்த்து கிளறவும்.
காய்கள் மூழ்கும் அளவிற்கு நீர் சேர்த்து, மூடி வைத்து வேகவிடவும்.
இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்து பின்னர் திறந்து எடுத்து, வாழைப்பழ தோசையுடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்