பாடாய் படுத்தும் வேர்குரு

அனைவருக்கும் வணக்கம் ...
என் 2 .4 வயது மகன் வேர்குருவால் மிகவும் அவதி படுகிறான் .. வேர்குருபவுடர் உபயோகின்றோம். ஆனால் பயன் இல்லை .. ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்.

எங்க அம்மா எங்களுக்கு சிறுவயதில் வேர்க்குரு தொல்லைக்கு செய்தது இது. சாதம் வடித்த கஞ்சியை இன்று தனியே எடுத்து வைத்து விட்டு மறுநாள் காலையில் பார்த்தால் அது ஜெல்லி போல் இறுகியிருக்கும். அதை குளிக்கும் போது உடலெங்கும் தடவி 2நிமிடம் களித்து சோப்பு போட்டு குளித்து வந்தல் வேர்க்குரு தொல்லை வரவே வராது. ஏற்கெனவே வந்த வேர்க்குருவும் மறைந்து விடும்.

இரவில் சந்தனக்கட்டையை அரைத்து பூசினாலும் வேர்க்குரு மறையும். ஆனால் கடையில் கிடைக்கும் சந்தன பொடிகள் வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராஜி எந்த வேர்குரு பவுடர் பூசுறீங்க குழந்தைக்கு. ஜான்சன் வேர்குரு பவுடர் இருக்கே அத பூசி பார்த்தீங்களா. வெயில் காலத்துக்கு சோப்பு யூஸ் பண்ணாதீங்க. குளியலுக்கு பச்சைபயறு மாவு உபயோகப்படுத்துங்க. அது குளிர்ச்சியும் கூட. கவி சொன்னமாதிரியும் முயற்சி செய்துப்பாருங்க ராஜி. ஆலோவேரா லோஷன் கூட கடையில் கிடைக்கிறது டாக்டர்கிட்ட கேட்டு பயன்படுத்துங்க.

ஹாய் ராஜி, ஆமாபா வேர்குருக்கு பணநுங்கு ஜூஸ் கூட தேய்க்கலாம்.

உன்னை போல பிறரையும் நேசி.

நன்றி கவிசிவா இப்ப தான் சித்தி போன் பண்ணி அம்மாகிட்ட புலம்பிகிட்டு இருந்தாங்க அவங்க பாப்பாக்கு வேர்குரு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்ன செய்றதுனு. சரி நம்ம மாலை அறுசுவைல கேட்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள ராஜியே கேட்டுட்டாங்க. நிச்சயம் நீங்க சொன்னதை செய்ய சொல்றேன்.

முடிந்த வரை கண்ட வேர்குரு பவுடர்களை பூசாமல் இருக்கலாம் என்பது என் கருத்து

கவிசிவா எந்த முறை பற்றி நான் கேள்வி பட்டது இல்லை .. கண்டிப்பா செய்து பார்க்கிறான் ...,

வினோஜா ஜான்சன் வேர்குரு பவுடர் use பண்ணிட்டேன் பா பட் நோ use .. இப்போ ஷோவேர் டூ ஷோவேர் , தேர்மி கூல் பா ...கடந்த வருடம் அவனுக்கு 4 கிரீம் அண்ட் lotions டாக்டர் குடுத்தாங்க பா ... அனா பயன் இல்லை ...

தேவி, நா உங்ககுடா முன்னாடியே பேசிருகேன் ... ஆனால் தொடர்ந்து பேச முடியல .. நுங்கு சீசன் வந்த கண்டிப்பா ட்ரை பண்றான்

யாழிநிமுகில், கண்டிப்பா ட்ரை பண்ணுங்க ....

மேலும் சில பதிவுகள்