சைனீஸ் பீப் கறி

தேதி: April 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பீப் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
கேரட் - 2
குடைமிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
சீனி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுதூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

முதலில் தேவையானவற்றை தயாராக வைத்து கொள்ளவும்.
கறியை ஒரு தேக்கரண்டி வினிகர் ஊற்றி நன்கு வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய், கேரட் எல்லாவற்றையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் நீக்கி தட்டி வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு போடவும். பின்பு வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் கேரட்டை சேர்த்து வதக்கவும்.
பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
கேரட் முக்கால்பதம் வெந்ததும் வேக வைத்த கறியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
கறி சேர்த்து கிளறி தண்ணீர் வற்றும் நேரத்தில் கலவையை ஓரத்தில் வைத்து நடுவில் சீனியை சேர்த்து லைட் பிரவுன் கலர் வரும் வரை வைத்து பின் ஒன்றாக கிளறவும்.
குடைமிளகாயை சேர்த்து கிளறவும்
பின்னர் அதில் சோயா சாஸினை ஊற்றி கிளறவும்.
சாஸ் ஊற்றி 3 நிமிடம் கழித்து மிளகுதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சைனீஸ் பீப் கறி ரெடி. சற்றே இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்த சைனீஸ் ஐடம் சைனீஸ் நூடுல்ஸுடனும், சைனீஸ் கண்டனிஸ் ரைசுடனும் நன்கு ஜோடி சேரும். இது சைனீசின் மெனுவில் இடம்பெறும் முக்கியமான உணவு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கல்பனா பாக்கவெ சூப்பரா இருக்கு ட்ரை பன்னிto
சொல்ரென்

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

கல்பனா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் விருப்ப பட்டியில் சேர்த்துட்டேன்
ஆலிவ் ஆயில் இல்லாமல் சன் ஃப்ளவர் ஆயிலில் செய்யலாமா?

கல்பனா நலமா?
நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்....இதேப் போல் மட்டனில் செய்துப்பார்த்து
சொல்கிறேன்....

ஹசீன்

வாவ்! சைனீஸ் பீஃப் ஸ்டிர் ஃப்ரை எனக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி,இதுவும் அசத்தலாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.