கிர்னி ஜூஸ்

தேதி: April 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

கிர்னி பழம் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
ஐஸ் கட்டி - தேவைக்கு
நாட்டுச் சர்க்கரை - 15 அல்லது 20 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பழத்தை தோல் எடுத்து நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் கிர்னி பழம், பால், நாட்டுச்சர்க்கரை, ஐஸ்கட்டி போட்டு நன்றாக அரைக்கவும். (இனிப்பு அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது போல் சேர்க்கலாம்)
சுவையான கிர்னி ஜூஸ் ரெடி.

வெயில் காலத்துக்கு ஏற்றது. நாட்டுச்சர்க்கரை இரும்பு சத்துள்ளது. நாட்டு சர்க்கரை கிடைக்காதவர்கள் வெல்லத்தை தூள் செய்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு சுற்று சுற்றி வடிகட்டி பின் ஜூஸில் சேர்க்கலாம். வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாத்திமாம்மா ஆஹா ஜில்லுனு ஒரு குறிப்புக் கொடுத்து அசத்திட்டீங்களே. பார்க்கவே குடிக்கனும் போல இருக்கு நிச்சயம் செய்துட்டு சொல்றேன்மா.

ஹாய் fathima how r u அஸ்ஸாலாமு அலைக்கும் பார்கவெ அலஹாஇருக்கு

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஹாய் பாத்திமா சூப்பர் வெயிலுக்கு ஏற்ற ஜூஸ் சூப்பரா இருக்கு இம்முறையில் நான் மாதுளை ஜூஸ் செய்வேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பாத்திம்மா-மா நாட்டு சர்க்கரை சேர்த்து செய்த ஹெல்தியான ஜூஸ் கொடுத்து இருக்கீங்க பழங்கள் வாங்கி செய்து பார்க்கிறேன். இந்த பழம் குளிர்ச்சிதானே.

hi, simply superb, it will be very useful for summer

அனுப்பிய இரண்டு நாட்களில் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

யாழு சொன்னதோட நில்லாமல் சட்டுன்னு செய்துட்டு சொல்லனும் சரியா? வருகைக்கு மிக்க நன்றிடா முதல்ல வந்து பதிவிட்டதுக்கும் நன்றி

வலைக்கும் சலாம்...நான் நலம் நீங்கள் நலமா? அழகாஇருக்குன்னு சொன்னதோட நில்லாமல் செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

(என் பெரிய பொண்ணு பெயர் ஷெரீன் பானு பெயரை பார்க்கவும் என்பொண்ணாக்கும்ன்னு நினைத்தேன் அப்புறம் தானதெரிந்தது இது ஷீரின் பானு)

குமாரி வருகைக்கு மிக்க நன்றி

வினோ இந்த பழம் குளிர்ச்சிதான் வெயிலுக்கு ஏத்த பழம் எப்பவுமே ஜீஸுக்கு சீனிதான் சேர்ப்போம் சக்கரை சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவைகிடைக்கும்
சீக்கிரம் செய்துட்டு சொல்லுடா வருகைக்கு நன்றி

அனிதா வருகைக்கு நன்றி
அடுத்து பதிவிடும் பொழுது தமிழில் பதிவிடுங்கள்

நலம். நான் செய்து பார்தேன். எதிர் பார்த்ததை விட ருசியாக இருந்தது. (உங்கள் பொண்ணு ஷெரீனை கேட்டதாக சொல்லவும்.)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஷீரின் அதுக்குள்ள செய்தாச்சா ரொம்ப நன்றி(கண்டிப்பா சொல்கிறேன்)

சலாம்மா,நலமா.ஹனி குட்டி எப்படி இருக்காங்க..
ரொம்ப அழகா செய்து காட்டிருக்கீங்க...
நானும் செய்துட்டு சொல்றேன்மா.
வாழ்த்துக்கள்...

ஹசீன்

கோடை வந்ததுனு இப்போ தான் தெரியுது
அருமையான குறிப்பு.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹமீதா அம்மா,

நலமா?நல்ல குளிர்ச்சியான குறிப்பு

எனது மகளுக்கு பிடித்த பழம்...இந்த பழம் சாப்பிட்டால் உணவே சாப்பிட மாட்டாள் அவளுக்கு இரண்டு வயது ஆகிறது அவளுக்கு பால் விட்டு தரலாமா,இல்லை நீர் விட்டாலே taste நன்றாக இருக்குமா?

என்றும் அன்புடன்,
கவிதா

வலைக்கும் சலாம்........ஹனிகுட்டி சூப்பரா இருக்கா உன் லுலுகுட்டி எப்படி இருக்கிறாள்? சீக்கிரம் செய்துட்டு சொல்லனும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ரம்யா கோடையை ஞாபகப்படுத்தவே இந்த குறிப்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கவி நான் நலம் நீங்களும் உங்க குட்டியும் நலமா?குழந்தைக்கு பால் சேர்த்து குடுத்துப்பாருங்கள் டேஸ்ட் புடிச்சி இருந்தா கண்டிப்பா வேணும்ன்னு கேப்பா அப்படி புடிக்கலைனா தண்ணீர் விட்டு குடுத்தாலும் டேஸ்டா இருக்கும் இரண்டு வயது குழந்தைக்கு தாராளமாக குடுக்கலாம் வருகைக்கு நன்றி

ஃபாத்திமா அம்மா,கிர்னி பழம் என்னவருக்கு ரொம்ப பிடிக்கும்.இங்கு கிடைத்த பின் கண்டிப்பா செய்துட்டு பதிவு போடுறேன்.வாழ்த்துக்கள்.

ஹாய் பாத்திமா, வெயிலுக்கு ஏத்த ஜூஸ்.பார்க்கும் போதே குடிக்கனும் போல இருக்கு சூப்பர்......... வாழ்த்துக்கள்..

உன்னை போல பிறரையும் நேசி.

சூப்பர்ப்பா ஜூஸ், கண்டிப்பா இந்த வாரமே செய்து பார்த்துவிடுகிறேன், அது அனைவருக்கும் உடலுக்கு நல்ல நாட்டுச்சர்க்கரையை வைத்து செய்திருக்கும்போது ஜூஸ் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹர்ஷா கிடைத்தவுடன் கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தேவி பார்த்தால் மட்டும் போதாது செய்துட்டு சொல்லுங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஹேமா சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நல்லது செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு மிக்க நன்றி

பாத்திமா அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் ...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

i will try it ..Can eat 11 months old baby???

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

நான் அருசுவை புதிய உறுபினர்
இந்த குறிப்பில் பால் காய்ச்சாமல் கலக்கலாமா??????

சுவர்ணா வருகைக்கு மிக்க நன்றி

பத்மா குழந்தைக்கு இதுக்கு முன் ஜீஸ் குடுத்து பழக்கம் இருந்தால் குடுங்கள் பழ்க்கம் இல்லையெனில் சிறிது குடுத்துப்பாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்துங்கள் வருகைக்கு நன்றி

புதிய உறுப்பினரே வருக!!

பால் காய்ச்சி ஆரவைத்து பின் சேர்க்கனும் பச்சை பாலில் கிருமிகளிருக்க வாய்ப்புண்டு வருகைக்கு நன்றி

எனக்கு ரொம்ப பிடிச்ச ஜூஸ். பழம் வாங்கியதும் போட்டுடறேன். வாழ்த்துக்கள்.

- நேற்று சொன்னேன்... நீங்க பார்க்கல போல இன்னும். இன்று செய்தாச்சு. ரொம்ப சூப்பர். சும்மாவே கிர்னி பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஜூஸ் போட்டா கசக்குமா?? ரசிச்சு குடிச்சேன். மிக்க நன்றி பாத்திமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

, நன் இந்த ட்ரின்க் செய்து பார்த்தேன் ,உடனே ரொம்ப நல்ல இருந்தது 5நிமிடத்துல கசப்பாயிடுச்சு அதற்கு காரணம் என்னவா இருக்கும் ? நான் நாட்டு சக்கரைக்கு பதில் சாதா சக்கரை போட்டேன் அதனாலயா?

'Angry words fan the fire like wind.'

sorry it repeatet

'Angry words fan the fire like wind.'