நுங்கு பாயாசம்

தேதி: April 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

நுங்கு - 6
ஏலக்காய் - 3
பால் - 3 கப்
சர்க்கரை - சுவைக்கு


 

முதலில் நுங்கின் தோலை நீக்கி கையால் ஒன்றுக்கு இரண்டாக மசித்து கொள்ள வேண்டும்.

பாலை காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

இப்போது நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பாயசம் பதத்திற்கு கலக்கவும்.

சுவையான நுங்கு பாயாசம் தயார்.


இது வித்தியாசமான , அலாதி சுவையுடைய பானம். இளம் நுங்காக இருந்தால் சுவை கூடும். குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பின் அருந்தவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரம்ஸ்,
கிர்னி பழம்,நுங்கு என்று அறுசுவையே குளு,குளுனு இருக்கு.நுங்கு எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும்.இங்கு நுங்கு கிடைப்பதில்லை.ஊருக்கு போனதும்,கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க ரொம்ப நல்லா இருக்கும். இங்கு நுங்கு கிடைத்தால் படம் எடுத்து அனுப்பி இருப்பேன். நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)