தேதி: April 11, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரிசி மாவு - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
தேங்காய் பால் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்.

பின்பு தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

பின்பு முறுக்கு சுற்றும் அச்சில் மாவை வைத்து முறுக்கு பிழிந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கை போட்டு பொரிக்க வேண்டும். முறுக்கு நன்றாக வெந்து சிவந்த பிறகு எடுத்து விடவும்.

சுவையான தேங்காய் பால் முறுக்கு தயார்.

தேங்காய் பால் சேர்ப்பதால் சுவை அதிகமாக இருக்கும். தேவையானால் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் சேர்க்க விரும்பாதவர்கள் வெண்ணெய், டால்டா அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
லக்ஷ்மி மேம்
வித்தியாசமா,ஈஸியா இருக்குது.வாழ்த்துக்கள் மேம்.தேங்காய் பால் சேர்ப்பதால் எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்.தனி மிளகாய் தூள் சேர்க்கலாமா.
Expectation lead to Disappointment
ஹாய் லெட்சுமி
ஹாய் லெட்சுமி, எப்படி இருக்கிங்க ஏன் பா அரட்டைக்கே வர்ரது இல்ல. ரொம்ப நாள் ஆச்சு உங்க கிட்ட பேசி.
தேங்காய்பால் முறுக்கு பார்க்கும் போதே சூப்பர இருக்கும்னு தெரியுது. வாழ்த்துக்கள்...
உன்னை போல பிறரையும் நேசி.
அட்மின்
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி..
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.
மீனாள்
மிளகாய் தூள் சேர்த்தும் செய்யலாம்.. தேங்காய் பால் சேர்ப்பதால் முறுக்கு நன்றாக இருக்கும்..
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.
Thank u Lakshmi
Dear Lakshmi, i am Hema Prasanna from London, i did thegai paal muruku, really easy methoad, nice taste also, Thank u so much of your recipy...
வாழ், வாழ விடு