சீனி சோறு

தேதி: April 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

பாசுமதி அரிசி - ஒரு டம்ளர்
தேங்காய்பால் - 2 1/4 டம்ளர்
சீனி - 1 1/4 டம்ளர்
தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பட்டை - சிறுத்துண்டு
முந்திரி பருப்பு - 30 எண்ணிக்கை
உப்பு - ஒரு பின்ச்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு கொட்டை பாக்கு அளவு
நெய் - 2 தேக்கரண்டி


 

அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, முந்திரி போட்டு தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்பால், உப்பு, அரிசி போட்டு ஒரு விசில் வரும் வரை வைக்கவும். பிறகு 4 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
சாதம் வெந்ததும் சீனி, நெய் சேர்த்து கிளறி வைக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.
சுவையான சீனி சோறு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்

ஹமீதா அம்மா
பார்க்கவே சூப்பரா இருக்கு.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சீனி சோறு ஈசியா இருக்கு.செய்துட்டு சொல்றேன் பாத்திமா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பாத்திமா அஸ்ஸலாமு அலைக்கும் நலமா பார்க்கவே அலஹா இருக்கு நான் இன்னைக்கு இன்ஷா அல்லாஹ் இதான் பன்ன போகிரென் fathima...

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

வித்த்யாசமான குறிப்பை கண்டதும் நீங்களோன்னு ஒரு சந்தேகம்... சரியா நீங்க தான். குட்டீஸ் குறிப்பா இருக்கு.... நிச்சயம் செய்துடறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு சீனி சோறு பண்னி சாப்டென் பாத்திமா சூப்பரா இருந்ததுமா....

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

தேவி வாழ்த்துக்கு நன்றி

கவி சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கள் வாழ்த்துக்கு நன்றி

குமாரி செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

வலைக்கும் சலாம் ஷெரின் உடனே செய்திட்டீங்களே நீங்க செம ஃபாஸ்ட் நன்றி

வனி சீக்கிரமா செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

எல்லோருக்கும் சாரி ஊருக்கு போய்விட்டதால் யாருக்கும் பதில் தரமுடியவில்லை