முட்டைகோஸ் சட்னி

தேதி: April 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைக்கோஸ் - 1 கப்
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 2 பல்
சிகப்பு மிளகாய் - 2
புளி - மிக சிறிய அளவு
உ.பருப்பு - 1 மேஜைக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு


 

முட்டைக்கோஸை நல்லா கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உ.பருப்பை பொரிய விட்டு,சி.மிளகாய்,வெங்காயம்,பூண்டு,தக்காளி,புளி போட்டு நல்லா வதக்கவும்.
பின்னர் கோஸை போட்டு வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.


இட்லி,தோசை,சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.வேண்டுமென்றால் தேங்காய் சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

kos chutney romba nalla irunthathu .
kurippuku nanri :-)