கறி ரசம்

தேதி: April 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

ஆட்டுக்கறி வேகவைத்த தண்ணீர் - 3கப்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பட்டை வத்தல் - 2 (அடுப்பில் சுட்டது)
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 8 அல்லது 10 பல்
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருளை தயாராக வைக்கவும்.
அரைக்க கொடுத்த பொருளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து அதில் கறி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அதில் பிசைந்து விட்டு போடவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து அரைத்த மசாலாவை போட்டு வதக்கி பின் புளித்தண்ணீர் கரைசலை தாளித்த கலவையில் ஊற்றி நுரை கட்டி வரவும் அடுப்பை அணைத்து விடவும்.
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்பொழுது கறி ரசம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கறி வேக வைக்கற தனியா அதுலயே தான் ஊத்துவோம்,இல்லைனா சூப் வைப்போம்,இது ரொம்ப புது மாதிரியா இருக்கே. அடுத்த முறை கண்டிப்பா இப்படி ரசம் வெச்சு பாக்கறேன். ரொம்ப சூப்பர் ஹ இருக்கு மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் பாத்திமா, ரசம் சூப்பர இருக்கு பார்க்கும் போதே தெரியுது. வாழ்த்துக்கள்......

உன்னை போல பிறரையும் நேசி.

பாத்திமா கறி ரசம் பார்க்கும்போதே சாப்பிட தோணுது.... வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா கறி ரசம் பார்க்கும்போதே சாப்பிட தோணுது.

hi

வித்தியாசமான குறிப்புகளுக்கு பெயர் பெற்றவர் நீங்க தான்... கறி வேக வைத்த நீரில் சூப் தெரியும், ரசம்... ரொம்ப ரொம்ப ரொம்ப புதுசு எனக்கு!!! சூப்பர். சத்தான குறிப்பு. இனி மட்டன் வேக் அவைத்த நீரை ஊற்றி குழம்பு நீர்த்து போகாம அதை எடுத்து ரசம் வைச்சுடலாம், கறியை குழம்பாக்கிடலாம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹமீதா அம்மா,
அம்மா வெந்தயம் மட்டும் போடாமல் இதே போலே செய்வாங்க
மட்டன் கிடைத்தால் கண்டிப்பாக செய்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

dear Fathima,
you have shared a different dish,thank u! i would like to suggest another dish with the same method,we should boil the crab by adding some water,then we can use that water to prepare rasam,same way we need not waste the head part of the prawn,we can add some water & grind it in a mixer,then filter it & we can use that water to prepare rasam,it tastes very delicious!just try this!

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

சுகி வித்தியாசமான ரசம் சீக்கிரம் செய்துட்டு சொல்லுடா வருகைக்கு நன்றி

தேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஸவர்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

saheli வருகைக்கு நன்றி

வனி இது எங்க பாட்டி செய்வாங்க ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் ட்ரைபண்ணி பாருங்கள் வருகைக்கு மிக்க நன்றி

கவி மட்டன் கிடைத்தவுடன் சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செல்வி நண்டுல ரசம் வைப்பாங்க கேள்விபட்டு இருக்கேன் எறால்ல கேள்விபட்டதில்லை உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
இனி தமிழில் டைப்செய்யுங்கள் வருகைக்கு நன்றி

எல்லோருக்கும் சாரி ஊருக்கு போய்விட்டதால் யாருக்கும் பதிவிட முடியவில்லை