வழங்கியவர் : lakshmi masanam
தேதி : வெள்ளி, 22/04/2011 - 13:19
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- மைதா மாவு - ஒரு கப்
- பொடித்த சர்க்கரை - ஒரு கப்
- நெய் - அரை கப்
- முட்டை - 3
- கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
- டியூட்டி ப்ருட்டி, ரெய்சின்ஸ் - தேவையான அளவு
- உப்பு - சிறிதளவு
- பேக்கிங் பவுடர்
- வெனிலா எசன்ஸ்
![]() |
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். |
![]() |
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி பீட்டர் அல்லது முட்டையை அடிக்க உதவும் கரண்டி கொண்டு நன்கு அடித்து கொள்ளவும், நுரை வரும் வரை நன்றாக அடிக்கவும். |
![]() |
பின்னர் அதனுடன் தூள் செய்த சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு அடிக்கவும். பின்னர் சிறிதளவு பேக்கிங் பவுடர், வெனிலா எசன்ஸ், கோ கோ பவுடர் சேர்த்து கலக்கவும். |
![]() |
அதனுடன் டியூட்டி ப்ருட்டி, ரெய்சின்ஸ் மற்றும் மைதா மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு கலக்கவும். |
![]() |
கேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில், உட்பகுதியில் வெண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மேல் மைதா மாவை தூவவும். மாவு பாத்திரத்தின் எல்லா பகுதியிலும் நன்கு ஒட்டி கொள்ளும். பாத்திரத்தை கீழ் நோக்கி தட்டினால், மீதம் உள்ள மாவு உதிர்ந்து விடும். கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வருவதற்காக இவ்வாறு செய்ய வேண்டும். இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும். அடுப்பில் தம் போடும் ப்ளேட் அல்லது தோசை கல்லை வைத்து அதன் மேல் கேக் கலவையை வைக்கவும். |
![]() |
கேஸை ஸ்ம்மில் 30 நிமிடம் வரை வைக்கவும். வெந்ததும் அதை ஒரு தட்டில் கவிழ்த்து பின்பு அதே பாத்திரத்தில் மேல் பாகம் அடியிலும், அடிபாகம் மேலும் இருக்குமாறு வைத்து மறுபடியும் மூடி போட்டு 10 - 15 நிமிடம் வரை வைக்கவும். பின்னர் ஒரு கத்தி அல்லது டுத்பிக்கை கேக்கினுள் விட்டு பார்த்தால் மாவு ஒட்டாமல் வர வேண்டும். |
![]() |
கேக் ஆறிய பின்பு கட் செய்து பரிமாறலாம். |
முட்டையை நுரை வரும் வரை அடித்தால் தான் கேக் ஸ்பான்ச் போல் வரும். விரும்பினால் முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழம் இவற்றை பொடியாக கட் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்







யம்மி யம்மி எப்போ செய்து சாப்பிட போறோம்னு இருக்கு இதை பார்த்ததும். நிச்சயம் டேஸ்ட்டும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். லெஷ்மி மேடம் எனக்கு ஒரு டவுட் தம் போட மூடி மேல எதுவும் வெயிட் வைக்க வேண்டாமா? அப்பறம் எங்ககிட்ட தம் போடும் ப்ளேட் இல்ல அதனால தோசைகல்லில் தான் தம் போடனும் 30 நிமிடம் தீயில் இருப்பதால் தோசைகல் எதுவும் ஆகிடுமா?
ஆஹா! படம் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது. ;)
இமா
லெக்ஷ்மி கேக் செய்யனுமா அவன் வேணும் நினைப்போம். எல்லோரும் ஈஸியா செய்யமாதிரி குக்கர் கேக், தம் கேக் செஞ்சு காண்பிக்கிறீங்க. யம்மியா இருக்கு. வாழ்த்துக்கள்.
ஆஹா யம்மி கேக். பார்க்கறதுக்கே சாப்பிடனும் போல இருக்கே, லெஷ்மி சூப்பர் கேக். எங்க வீட்டில தம் போடும் ப்ளேட் இல்ல.
பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கே பண்ண தான் வர்தான்னு தெரில super mam by elaya.G
கேக் பார்க்க சூப்பரா இருக்கு,அவனில் இதை செய்யலாமா?
எல்லா புகழும் இறைவனுக்கே!
ரொம்ப பிரமாதம்!!! பார்த்ததுமே அசந்துட்டேன்... ஈசியான அதே சமயம் சூப்பரான குறிப்பு. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
லக்ஷ்மி மேடம்,
அழகான கேக்!!! வாழ்த்துக்கள்
ஓவனில் வைத்தால் எத்தனை fahrenheit வைக்கலாம்?
அன்புடன்,
கவிதா
லக்ஷ்மி மேடம்,
அழகான கேக்!!! வாழ்த்துக்கள்
ஓவனில் வைத்தால் எத்தனை fahrenheit வைக்கலாம்?
அன்புடன்,
கவிதா
வாவ்!!! யம்மி கேக்!!! பார்த்ததும் சாப்பிடணும் போல இருக்கு... செய்முறையும் ரொம்ப எளிமையா இருக்கு... நான் இது வரை கேக் ட்ரை பண்ணினதே இல்ல, ஆனா உங்க செய்முறை என்னையும் கேக் செய்ய வச்சுடும் போல.... அதற்கு முன்னால் எனக்கு சில சந்தேகம்...
1. யாழினிக்கு வந்த அதே சந்தேகம் தான், பாத்திரத்தை மூடி போட்டு மூட வேண்டாமா? திறந்து வைத்தே செய்யலாமா?
2. என்னிடம் நான்ஸ்டிக் தோசைக்கல் தான் இருக்கு, அதையே பாத்திரத்தின் அடியில் வைக்கலாமா? அப்படி செய்தால் கேக் வருமா?
3. மைதா மாவு ஒரு கப் சொல்லியிருக்கீங்க, அதை முழுதும் கேக் செய்யும் பாத்திரத்தில் தூவணுமா?
இப்போதைக்கு இவ்வளவு தான் சந்தேகம் :) கொஞ்சம் விளக்குங்க ப்ளீஸ்...
-ஜெயந்தி
லெக்ஷ்மி சாரி. ஜெயந்தி கேட்டதற்கு எனக்கு தெரிந்த பதிலை கூறி இருக்கிறேன்.
ஜெயந்தி உங்க முதல் சந்தேகத்துக்கு பதில் தெரியல. நல்லா இருக்கற நாண்ஸ்டிக் தோசைக்கல்லுல வைச்சா ஹீட் ஜாஸ்தியா ஆகி தோசை சுடுவதற்கு சிரம்மா இருக்கும். நாண்ஸ்டிக் தோசைக்கல் உபயோகப்படுத்தாமா பழையதாக இருந்தால் பயன்படுத்தலாம்.
//மைதா மாவு ஒரு கப்//இது கேக் செய்வதற்கான அளவு. உங்கள் பாத்திரத்தை பொறுத்து தனியே மைதாவை தூவ வேண்டும்.
அழகான தெளிவான விளக்கங்கள், ரொம்ப அருமையா செய்து காட்டி இருக்கீங்க,
கேக் பாத்த உடனே சாப்பிடணும் போல இருக்கு, வாழ்த்துக்கள் லக்ஷ்மி...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
very good and thanks for your recipe.
ஒன் கப் maida equvai ml-la கொடுங்க
வாவ்.. சூப்பரான யம்மி கேக்..
சாப்பிட தூண்டுது
கண்டிப்பா செய்து பார்த்து சொல்கிறேன்
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
ரொம்ப நன்றி வினோ, லக்ஷ்மியின் சார்பில் உடனே பதில் குடுத்ததற்கு.... அதே சமயம் சாரி-யும் கேட்டுக்கறேன், இவ்வளவு லேட்டா பதில் குடுப்பதற்கு!!!
அனேக அன்புடன்
ஜெயந்தி
ஹாய் friends நான் இன்னைக்கு நம்ம லக்ஷ்மி மேம் செஞ்ச கேக் செய்யலாம்னு
பாத்தன் பா ஆனா அதுல அவங்க தம் போட்டு இருக்காங்க ஆனா மேல மூடாம் இருக்காங்க
மூடி போடனுமா வேணாமானு கொஞ்சம் சொல்லுங்க பா என் பசங்க தூங்கும் போதுதான்
என்னால செய்ய முடியும் pls பா பதில் சொல்லுங்க
தோழி, நீங்கள் கேக் குக்கரிலும் செய்யலாம். ஆனால் இந்த குறிப்பை அவர்கள் அப்படி செய்யவில்லை போலிருக்கிறது. உங்களுக்கு உதவுமானால் குக்கரில் எப்படி செய்வது என சொல்லட்டுமா. இல்லையேல் விவரம் தெரிந்த தோழிகள் யாராவது வந்து சொல்லுவார்கள்.
இதுவும் கடந்து போகும்.
யோகா சொல்லுங்க பா
முதலில் குக்கரில் மண்ணை போட்டு (ஒரு அரை இன்ச் அளவு) பத்து நிமிடம் சூடு செய்து கொள்ளுங்கள். மண் போட்டால் குக்கர் அடிப்புரத்திர்க்கு எந்த சேதமும் வராது என்பதால். இல்லையேல் நீங்கள் வேறு பட்டர் பேப்பர் போடலாம், அதுவும் இல்லை என்றால் ஏதேனும் stand (களவோடு என்பார்கள், குக்கர் உடனேயே ஒரு தட்டு கொடுப்பார்கள் கீழே போட அதையும் போடலாம்) போல் போட்டு அதன் மேல் கேக் கலவை கொண்ட பாத்திரத்தை வைக்கவேண்டும். நேரடியாக அடிப்புறத்தில் கேக் கலவை பாத்திரம் பட்டால் கேக் சீராக வேகாது என்பதால் இந்த ஏற்பாடு. ஹையில் தீ வைத்து பத்து நிமிடம் மண்ணை சூடு செய்து, பின் கேக் கலவை பாத்திரத்தை உள் வைத்து குக்கரை மூடி ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஹையில் வைத்து பின் சிம் செய்யவும். சிம்மில் உங்கள் கேக்கை அளவை பொறுத்து எவ்வளவு நிமிடங்கள் வைக்கவேண்டும் என்பது முடிவாகும். பொதுவாக நாங்கள் 25 நிமிடம் கழித்து திறந்து குச்சியால் அல்லது ஸ்பூன் பின்புறத்தால் குத்தி பார்ப்போம் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். இல்லையேல் மூடி போட்டு இன்னும் சிறிது நேரம் விடலாம். குச்சியில் மாவு ஒட்டாமல் வரும்போது அடுப்பை நிறுத்திவிட்டு கேக் பத்திரத்தை எடுத்து நன்கு ஆரிய பின் ஒரங்களை கத்தியால் எடுத்துவிட்டு கவிழ்த்து எடுக்கவும். குக்கரில் வெயிட் போட கூடாது. All the best.
இதுவும் கடந்து போகும்.
யோகா ரொம்ப நன்றி பா கண்டிப்பா செய்துட்டு சொல்ரன் பா
உங்க பதிலுக்கு நன்றி பா