கேரட் சட்னி

தேதி: April 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (6 votes)

 

கேரட் - 3
மிளகாய் வற்றல் - 3
உளுத்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு


 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
கேரட்டை தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பின் நறுக்கிய கேரட் துண்டுகளை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
எல்லாம் நன்கு ஆறிய பின் தேங்காய் துருவல், மிளகாய்வற்றல், வதக்கிய கேரட், உப்பு, புளி, சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.
பின் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் கலக்கவும். சுவையான கேரட் சட்னி தயார்.

இந்த கேரட் சட்னி சாதத்தில் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹர்ஷா

இந்த சட்னி இட்லி தோசைக்கு சரியான காம்பினேஷன். வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹர்ஷா புதுவிதமான சட்னி செய்ய பிடிக்கும். இன்னைக்கு செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்... ஆரோக்கியமான குறிப்புகளா கொடுத்துட்டு வரீங்க. கேரட் சட்னின்னு பார்த்ததும் பவின்னு நினைச்சேன்... பார்த்தா நீங்க. கலக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பரசி,

கலக்கறீங்க !!!
எளிமையான சட்னி வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது விளக்கப்பட குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும்,அறுசுவை குழுவினருக்கும் எனது நன்றிகள்.

குறிப்பை அளித்த திருமதி.முத்துலக்ஷ்மிக்கும் எனது நன்றிகள்.

மஞ்சு,
முதலாவதாக வந்துள்ள உங்க பதிவு பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

வினோ,
எனக்கும் புதுவிதமான சட்னி என்றால் ரொம்ப பிடிக்கும்.அதனால் தான் முத்துலஷ்மியின் குறிப்பில் இருந்து,செய்து பார்த்து,பிடித்ததால் படம் எடுத்து அனுப்பினேன்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

வனிதா,
பவி என்றாலே பீட்ரூட் குறிப்பு தானே நினைவுக்கு வரும்.
இந்த சட்னி ஆரோக்கியமானது.சுவையாகவும் இருந்தது.கேரட் கொண்டு செய்த சட்னி என்று சொன்னால்தான் தெரியும்.கலாட்டா கிச்சனுக்காக முத்துலக்‌ஷ்மியின் குறிப்பில் செய்து பார்த்தது.
இப்போ அடிக்கடி செய்துவிடுகிறேன்.உங்க பதிவுக்கு நன்றி.

கவிதா,
கேரட் மற்றும் பீட்ரூட் நிறைய சேர்த்துக்கோங்க.குழந்தைக்கு ரொம்ப நல்லது.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

அட்மின் அண்ணா,
சிரமம் பார்க்காமல்,கடைசி படத்தை இணைத்ததற்கு மிக்க நன்றி.

இந்த சட்னி தான் இன்று இரவு எங்க வீட்டில் ரொம்ப சுவையா இருக்கு தோசைக்கு. செய்ய சுலபமாவும் இருக்கு, வித்தியாசமாவும் இருக்கு. ரொம்ப நன்றி ஹர்ஷா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
அதுக்குள்ள செய்துட்டீங்களா?ரொம்ப நன்றி.குறிப்புகள் அத்தனைக்கும் பதிவிட்டு,செய்து பார்த்து,பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்க தான். ;-) மீண்டும் நன்றி.

அழகான் ஆரோக்கியமான கலர்ஃபுலான குறிப்பு
கேரட்டில் சட்னி செய்தது இல்லை
கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எளிமையான சட்னி வாழ்த்துக்கள் அன்பரசி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்ஸ்,
உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.

குமாரி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

ஹர்ஷா,
உங்கள் கேரட் சட்னி இன்று செய்தேன்...தோசைக்கு மிகவும் அருமையாக இருந்தது....
மிக்க நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிகவும் நன்றாக இருந்தது

அன்பு, காய்கறிகளில் முள்ளங்கிக்கு அடுத்தபடியாக கேரட்டில் சட்னி செய்வது இதுவே முதல் முறை ;) வழக்கமான சட்னி சுவைகளில் இருந்து வித்தியாசமான சுவையில் இருந்தது. சத்தான சட்னியும் கூட. நன்றிகள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.