தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 1/2 கிலோ
- சீனி - 3 கப்
- வெஜிடபிள் ஜெல்லி - 10 கிராம்
செய்முறை
- முழு தக்காளிகளை சுமார் 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாக வேகவைத்து எடுத்து, ஆறியவுடன் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- ஜெல்லியை நீர்விட்டு நன்றாக காய்ச்சி அதோடு சேர்த்து, சீனியையும் அத்துடன் கொட்டி, அடுப்பை மெதுவான சூட்டில் வைத்து, இடையிடையே அடிபிடிக்காமல் கிண்டிக் கொண்டிருக்க வேண்டும்.
- இறுகி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறியவுடன் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
-
குறிப்பு
எந்த கெமிக்கல் வகைகளும் சேர்க்காததால், ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.