அதிரசம்

வழங்கியவர் : திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்
தேதி : புதன், 31/05/2006 - 16:45
ஆயத்த நேரம் : ----------
சமைக்கும் நேரம் : முப்பது நிமிடங்கள்
பரிமாறும் அளவு : பதினைந்து நபர்களுக்கு
- ப.அரிசி - அரை கிலோ
- வெல்லம் - கால் கிலோ
- ஏலக்காய் - ஐந்து
- நெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
- ரீபைண்ட் ஆயில் - அரை லிட்டர்
- ஏலக்காயை தோல் நீக்கி பொடித்து வைக்கவும்.
- அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி நீரை நன்கு வடித்து விட்டு ஈரமாக இருக்கும் போதே மிக்ஸியில் போட்டு திரித்து சல்லடையில் சலித்து மாவு தாயாரிக்கவும்.
- மாவு ஈரமாக இருக்கும் போதே அடுப்பில் வாணலியை வைத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.
- பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முத்துப் பதத்திற்கு பாகு வைக்கவும்.
- பாகு பதத்திற்கு வந்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு கிண்ட வேன்டும்.
- பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- மாவு இருக்கமாக இருக்கக் கூடாது. சிறிது தளர இருக்க வேண்டும். மாவை உருண்டைய்யாக உருட்டினால் வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, மாவை ஒரே உருண்டையாக உருட்டி சுற்றி நெய் தடவி அதில் போட்டு மூடி வைக்கவும்.
- மறுநாள் மிதமான தீயில் எண்ணையை சூடாக்கவும்.
- சிறிய எலுமிச்சையளவு மாவை உருண்டையாக உருட்டி பிறகு லேசாக தட்டி எண்ணையில் போட்டு பொறித்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
Note:
*முத்து பதம் என்பது ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, சிறிது பாகை விட்டு ஒரு நிமிடம் கழித்து கையால் உருட்டினால் மெதுவான உருண்டையாக இருக்க வேண்டும். (கடினமாக இருக்க கூடாது)
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
19 sec முன்பு
2 நிமிடங்கள் 3 sec முன்பு
2 நிமிடங்கள் 30 sec முன்பு
3 நிமிடங்கள் 42 sec முன்பு
6 நிமிடங்கள் 19 sec முன்பு
9 நிமிடங்கள் 10 sec முன்பு
9 நிமிடங்கள் 38 sec முன்பு
9 நிமிடங்கள் 29 sec முன்பு
10 நிமிடங்கள் 11 sec முன்பு
13 நிமிடங்கள் 52 sec முன்பு