மூச்சி விடுவது மிகவும் சிரமமாக

எனக்கு கடந்த சில மாதங்களாக மூக்கு அடைப்பால் மிகவும் அவதிப்படுகிறேன். வாய் வழியாய் தான் மூச்சு விடுகிறேன். நிறைய சளி & அலர்ஜி மாத்திரைகள் போட்டும் பயனில்லை. இப்ப நான் 3 மாதம் கர்ப்பமாக உள்ளேன். இதனால் வாய் வழியாக மூச்சி விடுவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த சமயத்தில் ஆவி(வேது) பிடிக்கலாமா?. அருசுவை தோழிகளே உங்களுக்கு ஏதாவது வீட்டு வைத்தியம் தெரிந்தால் கூறுங்களேன்

தோழி இதற்கு வீட்டுவைத்தியம் எதுவும் தெரியவில்லை ஆனால் மூக்கில் சதை வளர்ந்தால் இப்படி மூச்செடுப்பதில் சிரமம் அத்துடன் குற்ட்டை காணப்படும். எனது மகனுக்கு 2வயது இருக்கும் போது இப்படி இருந்த்தது நிறைய மருந்து எடுத்தோம் எல்லா டாக்டர்சும் சளிக்கு தான் மருந்து தந்தார்கள் ஆனால் சரிவரவில்லை, பின் ENT டாக்டர் ஒருவரிடம் காண்பித்தபோது அவர் பார்த்துவிட்டு மூக்கில் சதை வளர்ந்துள்ளது என்றார் பின்operationசெய்தோம், எனது அனுபவத்தை சொன்னேன் நீங்களும் ஒரு டாக்டரைப் பாருங்கள். உங்கள் குழந்தை ஆரோக்கியமாய் வளர வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆவிபிடிக்கிறதுல எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்பவும் பிடிக்கலாம். உங்களுக்கு அது வசதியாக இருந்தால் பண்ணுங்க. ஈசியா இருக்கும்.
//நிறைய சளி & அலர்ஜி மாத்திரைகள் போட்டும் பயனில்லை.// என்று சொல்லி இருக்கீங்க. வைத்திய ஆலோசனையோடதானே எடுக்கிறீங்க?

‍- இமா க்றிஸ்

முதலில் உங்கள் இருவருக்கும் நன்றி Madam .இதில் எனக்கு காது கூட அடைச்சிகிட்டு இருக்கு.இமா Madame நான் டாக்டர் கொடுக்கும் மாத்திரை தான் சாப்பிடுகிறேன். பூங்காற்று madame ஒரு வேளை எனக்கும் இந்த மாதிரி சதை வளர்ந்திருந்தா நான் operation செய்யலாமா? இதனால் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஏதாவது பிரச்சனைகள் வருமா? இப்ப உங்க பிள்ளைக்கு இந்த தொந்தரவு போய் விட்டதா?

shagila

முதலில் ENT, அலர்ஜி டாக்டரிடம் போய் காண்பியுங்கள். சில டாக்டர் மேலோட்டமாக பார்த்துட்டு அலர்ஜி என்று கூறி நமக்கு மாத்திரை எழுதி கொடுத்துவிடுவார்கள். நமக்கு குணம் அடைந்துபோல் இருக்காது. தலைக்கு, நெஞ்சுப்பகுதிக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பாருங்க. ஆவி(வேது) பிடிக்கிறது அப்போதைக்கு நிவாரணம் தருவது போல் இருக்கும். சளி இருக்கும்போது நிறைய நீர்ச்சத்து காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம். கூடியவரைக்கும் அதை தவிர்க்க பாருங்க. இது எனக்கு டாக்டர் சொன்னதுதான்.

முச்சு அடைப்பு ஒவ்வாமை கராணம். முக்கில் சதை வ்ளர்வது அடுததது. ஒரு மருத்துவரை காணவும். எனக்கு பத்து வருடங்கலுக்கு முன் அருவை சைதும் மருபடியும் இப்பொது ஆரம்பித்து உள்ளது. ஹொமியொபத்தி மருந்து ஒரு மாதமகா எடுக்கிரைன். முன்னெட்ரம் தெரிகிரது.

I love cooking, sharing eating and enjoying.

தோழி நீங்கள் உடனே உங்களுக்கும் சதை வளர்ந்திருக்கும் என முடிவெடுக்க வேண்டாம்/ முதலில் ENT டாக்டர் ஒருவரை கன்சல்ட் பண்ணுங்கள்.X-RAY பார்த்து விட்டு என்னன்னு சொல்வார் .

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்