ஈசி கார குழம்பு

தேதி: April 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (9 votes)

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 5 பல்
புளி - தேவையான அளவு
குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். பிறகு அதில் பூண்டு, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு பாதி வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் மிளகாய் தூள், புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து கலவை குழம்பு பதத்திற்கு வந்த உடன் இறக்கி வைத்து பரிமாறவும். சப்பாத்தி மற்றும் சாதம் போன்றவற்றிற்கு ஏற்ற குழம்பு இது இரண்டு நாள் வரை நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தேவி... சுலபமான குறிப்பு. அவசியம் செய்துடறேன். வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தேவி,எப்படி இருக்கீங்க?

ஈசி காரக் குழம்பு டேஸ்ட்டா இருந்துச்சு தேவி.நீங்க சொன்ன மாதிரி சாதம்,சப்பாத்தி இரண்டுக்குமே சூட்டாச்சு.நன்றி தேவி.தொடர்ந்து பல குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள் தேவி.

அன்புடன்
நித்திலா

ஈசியான குறிப்பாக இருக்கு. செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

மணிமுத்துமாலை

தேவி,

எளிமையான சுவையான குறிப்பு செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா