கிரீன் பராத்தா

தேதி: April 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோதுமை மாவு - 1 கப்
மேத்திக்கீரை - 1 கைப்புடி
புதினா - 10 இலை
பாலக்கீரை - 1 கைப்புடி
சோய்க்கீரை - 1 கைப்புடி
உப்பு - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/4 tsp
தனியா தூள் - 1/4 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
கரம் மசாலா தூள் - 1/4 tsp
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp
எண்ணெய் - 1/2 tsp


 

கீரை வகைகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசி போகும் வரை வதக்கவும்.
எல்லா பொடி வகைகளையும் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி கீரை வகைகளை சேர்த்து உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஆறியபின் மாவுடன் சேர்த்து பிசைந்து ஒரு அரைமணி நேரமாவது ஊறவிட்டு சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும்.


இதற்க்கு தொட்டுக் கொள்ள எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்