vaitrupoku help panunga

en akavuku 9 months baby.sapitathum dysntery pogiduvan.avan munnadiyae weight kammi.ippa inum weight kammiyachu lactogen than tharanga pis help panunga

சாரதா, தவறான நினைக்க வேண்டாம். குழந்தைகளுக்கு இங்கே வைத்தியம் கேட்டு காத்திருப்பதை விட ஒரு நல்ல மருத்துவரை பார்த்து மருத்துவம் பார்க்கலாம். பெரியவர்களுக்கு என்றால் கை வைத்தியம் சொல்லலாம். குழந்தைகளுக்கு அந்த அளவிற்கு சரிவராது. நோய் பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள். பாவம் குழந்தைகளுக்கு அது முடியாதே. தவிர, ஒவ்வொரு குழந்தையின் உடல்நிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும். இங்கே தோழிகள் சொல்லும் வைத்தியம் அந்த குழந்தைக்கு பொருந்திப் போகுமா என்று நிச்சயித்தும் கூற முடியாது. அதனால் நீங்கள் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுவதே சரியான தீர்வாக இருக்கும். உங்கள் அக்காவை கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒருவயது முடிவதற்குள் இது போல எதாவது சிறு உடல் உபாதைகள் குழந்தைகளுக்கு வரத்தான் செய்யும். சீக்கிரமே குணமாகும். கவலை வேண்டாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்