பலாமோஸ் மசாலா சமையல் குறிப்பு - படங்களுடன் - 18935 | அறுசுவை


பலாமோஸ் மசாலா

வழங்கியவர் : swarna vijayakumaar
தேதி : வெள்ளி, 29/04/2011 - 12:23
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
4 votes
Your rating: None

 

 • பலாமோஸ் சிறியது - ஒன்று
 • பெரிய வெங்காயம் - ஒன்று
 • பூண்டு - 10 பல்
 • தக்காளி - ஒன்று
 • உப்பு - தேவைக்கு
 • அரைக்கவும் :
 • தேங்காய் - அரை மூடி
 • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • தாளிக்க :
 • பட்டை - 2 துண்டு
 • கிராம்பு - நான்கு
 • சோம்பு - கால் தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • எண்ணெய் - தேவைக்கு

 

முதலில் பலாமோஸ், வெங்காயம், பூண்டு, தக்காளி இவைகளை பொடியாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு தாளிக்கவும்.

வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் பலாமோஸ், அரைத்த தேங்காய் விழுது, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைக்கவும்.

இறக்கி வைத்து மல்லித்தழை தூவி பரிமாற சுவையான பலாமோஸ் மசாலா தயார்.ஸ்வர்ணா

ஸ்வர்ணா பலா சீசன் வந்துடுச்சா. பலாமோஸ் சாப்பிட்டது இல்லை. மசாலாவா பார்க்கும்போது செய்யனும் தோனுது. இதன் தோல் நீக்கித்தானே சமைக்கனும். பிஞ்சா இருக்கறதுனால அப்படியே விட்டுட்டுலாமா?

சுவர்ணா

பார்க்க அசத்தலா இருக்கு... ஆனா ஒரு சின்ன சந்தேகம்... வாட் இஸ் ‘பலாமோஸ்’?? ;) மெயின் அயிட்டம் பேரே தெரியலன்னு திட்டாதீங்க... சொன்னா தானே வாங்கி செய்ய முடியும்? ஆசையா இருக்கு குறிப்பை பார்க்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

பலா பிஞ்சுதான் பலாமோஸ் சொல்லுவாங்க. பழம்வராததுக்கு முன்னே சின்னதா இருக்கும்போதே பறிச்சுடுவாங்க. வனி குறிப்பின் முதல் படத்துல பச்சைகலரல இருக்கு பாருங்க.

ஸ்வர்

ஹாய் ஸ்வர், நேத்து தான் கடையில பார்த்துட்டு வந்தேன். அப்போ நெனச்சிட்டே வந்தேன். அறுசுவையில பலாமோஸ் செய் முறை தேடனும் னு. ஆனா தக்க நேரத்துல உங்க குறிப்பு வந்து இருக்கு. இது எனக்கு ரொம்ப பிடிக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுரேன். வாழ்த்துக்கள்.......

உன்னை போல பிறரையும் நேசி.

சுவா

சுவா, பைனலி பலாமோஸ் குறிப்பை தந்துட்டீங்களா? அப்படியே நீங்க செய்து வச்சிருக்க பலாமோஸையும் அந்த பவுலோட தந்துடுங்க. சந்தோஷமா சாப்டுக்குவேன். ரொம்ப நல்ல ருசியான குறிப்பு பா. பார்க்கும் போதே அதன் ருசியும் விளங்கும் :)) எனக்கெல்லாம் பலா பிஞ்சு கிடைக்குமான்னு சந்தேகம் தான் பா. சாப்பிடனும்னு தோணுச்சுன்னா கும்பகோணம் வர்றேன் செய்து தந்துடுங்க சரியோ.. வழக்கம்போல படங்கள் அத்தனை அழகு. வாழ்த்துக்கள் சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்வர்ணா

ஸ்வர்ணா வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

ஸ்வர்ணா

வாழ்த்துக்கள் ஸ்வர்ணா
பாரம்பரிய சமையல் குறிப்பு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஸ்வர்

ஹாய் ஸ்வர்,பேர் பார்த்தவுடனே நினைச்சேன் நீங்களாதான் இருப்பீங்கனு,நீங்களேதான்.

பார்க்கவே ஆசையாயிருக்கு ஸ்வர்.சுவையை பத்தி சொல்லவே வேண்டாம்.பிஸியாயிருக்கப்பவும்,தொடர்ந்து அசத்தலான குறிப்புகள் கொடுக்கற என் தங்கத்துக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.போட்டோஸ் வழக்கம் போல அழகோ அழகு ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

வினோ

பதிலுக்கு மிக்க நன்றிங்க. ஆனா அது உள்ளே எப்படி இருக்கும்? எப்படி சுத்தம் பண்ணனும்? நான் இது போல ஒரு கடையில் பார்த்திருக்கேன்... எதுக்குன்னு தெரியாததால் வாங்கியதில்லை. சொல்லி கொடுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி...........

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு எனது நன்றி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.