உருளை குருமா

தேதி: May 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (8 votes)

 

உருளைக்கிழங்கு - இரண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
சோளமாவு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது


 

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.
வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.
கிழங்கு நன்றாக சேர்ந்து வெந்ததும் ஒரு தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து கிழங்குடன் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
வேறு பாத்திரத்திற்கு மாற்றி கிழங்கு மேலே கொத்தமல்லி இலை தூவவும். பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாங்களும் இது போல் தான் செய்வோம் பூரிக்கு. நல்ல சுவையான குறிப்பு. வாழ்த்துக்கள் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூரி கிழங்குக்கு கடலைமாவு கரைத்து விட்டுதான் செய்வோம். அடுத்த தடவை உங்க முறைப்படி செய்துப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

ஹாய் குமாரி, பூரி சப்பாத்திக்கு சூப்பர் காமினேசன் வாழ்த்துக்கள்..........

உன்னை போல பிறரையும் நேசி.

உங்க குறிப்பு மிகவும் நன்றாக உள்ளது.நேற்று எங்க வீட்டில் உங்க மாங்காய் சாம்பார் தான்.நீங்க சொன்ன மாதிரி 20 நிமிடத்தில் செய்து விட்டேன்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி..........

ஹாய் குமாரி உங்கள் குறிப்பு எளிமையாக உள்ளது வாழ்த்துக்கள்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

ஹாய் குமாரி...

உங்கள் குறிப்பு நன்றாக செய்வதற்கு ஈஸ்ய்யாக உள்ளது

முயற்சி செய்து பார்கிறேன்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வனி நலமா? உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வினோ இம்முறையில் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் .உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி உங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரேணு தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி..மாங்காய் சாம்பார் செய்து பார்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் லக்ஷ்மி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி நீங்க சமையல் ராணியா மாறிடீங்களா வாழ்த்துக்கள் உங்கள் குறிப்பு அனைத்தும் அருமை. நான் விரைவிலேயே இதை செய்துவிட்டு சொல்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரேவதி நலமா?ரொம்ப நாளை காணுமே உங்களை.

ஹா ஹா ஹா சமையல் ராணியா அதெல்லாம் ஒன்னும் இல்லை.

உங்கள் பாராட்டுக்கும் வருக்கைக்கும் நன்றி

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பர் பா நானும் இந்த முறையில் தாண் செய்வேன் பார்க்கவே சாப்பிட வான்னு கூப்டுது இன்னைக்கு இரவு செய்துட வேண்டியது தான்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இன்னைக்கு செய்துட்டு நாளைக்கு சொல்லுங்க..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி மேடம்,

எளிமையான குருமா..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி kavi

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி நாங்களும் இதுபோலதான் செய்வோம் வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪