தக்காளி ரசம்

தேதி: May 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (6 votes)

 

தக்காளி - 3
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு சீரக பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை


 

தக்காளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தக்காளி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து அதில் புளி சேர்க்கவும். பிறகு தக்காளி தோலை எடுத்து விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். அதில் பெருங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் தக்காளி புளி கரைத்த தண்ணீரை சேர்க்கவும். அதனுடன் மிளகு சீரக பொடி சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும்.
தக்காளி ரசம் ரெடி. இதனை சூப் போலவும் குடிக்கலாம் மிகவும் சுவையான ரசம் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள் )

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டூ இன் ஒன் ரெசிப்பி ஈஸியா இருக்கு. மூனு ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க. இன்னும் நிறைய ரெசிப்பி கொடுத்து நீங்களும் கூட்டாஞ்சோறில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

தேவி மேடம்,

சூப்பர் ரசம்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இரண்டு முறை செய்து விட்டேன்..........ரொம்ப நல்லா இருந்தது.........

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.