டாக்டர்கள், நர்ஸ்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

தோழிகளே எனக்கு நேர்ந்த ஒரு மிகவும் மோசமான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. கடந்த ஒரு வாரமாக என் இரண்டு வயது மகனுக்கு சளி மற்றும் ஜுரத்தால் உடல் நிலை சரி இல்லை, முகம் வீங்கி கழுத்து மற்றும் காதின் பின் புறம் நெறி கட்டி இருந்தது.. நாங்கள் வழக்கமாக காண்பிக்கும் டாக்டர் என் மகனை பரிசோதித்து விட்டு பயப்பட வேண்டாம் சளியினால் முகம் வீங்கி நெறி கட்டி இருக்கிறது, ஒரு வாரம் அவர் கொடுக்கும் மருந்தினை கொடுத்து பின்பு கூட்டி வரும் படி கூறினார். நான் தொடர்ச்சியாக மருந்து ஐந்து நாட்கள் கொடுத்ததும் குழந்தை உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சளி ஜூரம், முக வீக்கம் எதுவுமே குறைய வில்லை.. எங்கள் மருத்துவர் ஊரில் இல்லாததால், எங்களுக்கு தெரிந்தவர்கள் சிலர் அவர்களுக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரிடம் செல்லும்படி கூறினர். நாங்களும் வேறு வழி இல்லாமல் அந்த மருத்துவரிடம் சென்றோம். அவர் என் குழந்தையை பரிசோதித்து கூட பார்க்காமல், மகனின் முகத்தை மட்டும் பார்த்து இந்த கேஸ் உடனே அட்மிட் பண்ணனும் என்றார். நான் உடனே பதறி என்ன என்று கேட்பதற்குள், உங்கள் குழந்தையின் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து இருக்கிறது அதான் முகம் வீங்கி இருக்கிறது என்றார். எனக்கு தலையை சுற்ற ஆரம்பித்து விட்டது, சமாளித்து கொண்டு இல்லை டாக்டர் இவனுக்கு சளியினால் இப்படி இருக்கிறது என்றேன், அதற்க்கு அவர் நீங்கள் மருத்துவரா இல்லை நானா, உடனே நிறைய பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட லாபிர்க்கு நிறைய டெஸ்ட் எழுதி கொடுத்து, குழந்தைக்கு எதுவும் ஆகாமல் பிழைக்க வேண்டி கொள்ளுங்கள் என்றார்.. எனக்கோ ஸ்தபித்த நிலை, ஆண்டவா என்று அழ கூட திராணி இல்லாமல் அவர் கூறிய லாபிர்க்கு சென்று அனைத்து டெஸ்டும் எடுத்து முடித்தோம், ரிசல்ட் வருவதற்குள் நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை, ரிசல்ட் எல்லாம் நார்மல் என்று வந்த பின் தான் எங்களுக்கு உயிரே வந்தது.. ரிசல்ட் வருவதற்காக நாங்கள் வெயிட் செய்த அந்த ஆறு மணி நேரம் நரக வேதனை, வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை.. ரிசல்ட்டை அந்த டாக்டரிடம் கொண்டு சென்றால் அவர் முகத்தை கடு கடு என்று வைத்து கொண்டு எல்லாம் நார்மல்லா, சரி ஒரு ஊசி போட்ட எல்லாம் சரி ஆகி விடும் என்று நர்சை ஊசி போடா சொன்னார், அந்த நர்ஸ் அந்த டாக்டரை விட மகா சிடு மூஞ்சி, நான் குழந்தையை சரியாக பிடிபதர்க்குள் ஊசியை போட்டு விட்டார், என் குழந்தை வலியால் திமிறி அவர் குத்திய ஊசி வளைந்து விட்டது, வலியால் துடிக்கும் என் மகனை சமாதானம் செய்வதா இல்லை தவறாக ஊசி குத்திய அந்த நர்சை கடிந்து கொள்வதா? ஏன் இப்படி அவசர படுகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் ஒருவர் தான் எங்களுக்கு பேஷண்ட்டா எவ்ளோ பேர் நாங்க பார்க்கணும் கிளம்புங்க என்றாரே பார்க்கலாம்... காலையில் இருந்து ஏற்பட்ட மன உளைச்சலால் அவர்களிடம் கோப பட கூட முடியாத சோர்வில் அங்கிருந்து கிளம்பினோம்.. இத்தனைக்கும் அந்த மருத்துவர் ஒரு நோயாளியை மூன்று நிமிடம் கூட பார்பதில்லை, அவர்கள் கிளம்புவதற்குள் அடுத்த நோயாளியை வர சொல்லிவிடுகிறார்... மருத்துவம் எவ்வளவு புனிதமான தொழில், கடவுளுக்கு அடுத்த படியாக நாம் நம்புவது மருத்துவரை தான், அத்தகைய உயர்வான பணியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.. வசதியற்றவர்கள் செல்லும் இலவச மருத்துவமனையில் தான் இத்தகைய கேவலமான நடவடிக்கைகள் நடக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு கன்சல்டறேஷன்நிற்க்கு 200 ருபாய் வாங்கும் இத்தகைய கிளினிக்களிலும் இவ்வாறு நடத்த படுவதை என்ன வென்று சொல்வது? மருத்துவம் முழு வியாபாரம் ஆகி விட்ட இந்த காலத்தில் நிறைய டாக்டர்களும் நர்சல்களும் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றனர்.. சேவை என்று இருந்த இந்த தொழில் அடியோடு மாறி ஒவ்வொரு நொடிக்கும் பணம் பணம் என்ற நிலை ஆகி விட்டது...

if you are alright, can you please provide the name of the Hospital so that we can avoid going to that hospital & avoid those bad situations in future. if not , no problem, thanks for creating awareness.

whenever anything like health or any emotional problems, first we should become calm, and then think so many times before making any decision, when we are going to buy Saree, we are thinking about which shop is good, which color is good, design, material, stones, embroidery works etc etc, but when it comes to health or even food that we eat, i think we have to think about both the good & bads & then decide,

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

உங்கள் பதிவை படித்தேன்.. மிக கோவமும் ஆத்திரமும் தான் வருகிறது.. உங்கள் நிலைமையில் யாரும் எதிர்க்க முடியாத மன வேதனையில் தான் இருப்பொம்.. 2 வயது பிஞ்சு குழந்தை எனக் கூற அந்த நர்ஸுக்கு தெரியலையா? அவ நல்லாவா இருப்பா? நானா இருந்தேனா பளிச்சுனு ஒரு அப்பு விட்டிருப்பேன். அதுல எகத்தாலமா ஒரு பதில் வேற..

இதே போல எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது..காய்ச்சலில் என் தொழி மிகவும் நடக்கக் கூட முடியாமல் நின்று கொண்டிருந்தாள்..கீழே ரிஷப்ஷனில் நான் டாக்டரை கேட்டதற்கு இரண்டாவது மாடி என்றார்கள் அங்கே போனால், இல்லை கீழே தானு சொன்னாங்க. கீழே வந்து கேட்டால், கேட்பது கூட கவனிக்காமல், ஒருத்தி ஃபோனில சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கு.. ஒன்னொரு பெண், அங்கே வேலை செய்யும் பயனிடம் வழிந்துக் கொண்டிருந்தது.. எனக்கு வந்தது பாருங்க.. டென்ஷன் தலைக்கு ஏறிடுச்சு. திரும்பவும் அந்த பெண்.. நான் என்ன சொல்கிறேனுக் கூட கேட்க்காமல், மேலே தானே போக சொன்னேனு கடுகடுனு சொல்லிடுச்சு.. முன்னாடி இருந்தா ஹால்ஸ் பட்டலை விட்டெறிஞ்சே பாருங்க.. மூனும் பேனு நிக்குது.. கண்டப்படி திட்டிட்டேன்.. இந்த மாதிரி காலேஜ் படிக்கும் சமயத்தில் அடிக்கடி ரொம்ப டென்ஷன் ஆவேன். இப்போ தான் குறைச்சிட்டேன். இருந்தாலும் இதை போல சம்பவங்களை கேள்விபட்டால், எரிச்சல் தான் வருது ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நானும் நிறைய கேள்வி பட்டுள்ளேன். நம்ம கேப்டன் படம் பார்த்து இப்படி கூடவா நடக்கும் என்று வியந்துள்ளேன்.

எங்களுக்கு திருமணம் ஆன புதிது. அலுவலக நிமித்தமாக நான் பெங்களூரிலிருந்து சென்னை செல்ல நேர்ந்தது. கிளம்பும் நேரத்தில் பார்த்தால் என் கணவருக்கு லேசான நெஞ்சு வலி. என்னால் அவரை அங்கேயே விட்டு விட்டு வர முடியவில்லை. அதனால் அவரையும் சென்னை அழைத்து வந்தேன். நான் வேலைக்கு சென்று விட்டேன். என் அப்பா அவரை கூட்டி கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு சென்றார். காலையில் பத்து மணிக்கு சென்று அவர்கள் சாயங்காலம் ஏழு எட்டு மணிக்கு தான் வீடு திரும்பினார்கள். ஒன்றும் இல்லையாம் வாயுவாம். இதற்க்கு எதுக்கு எவ்வளவு நேரம் என்று தானே....முதலில் ஜெனரல் பிசிஷியானை பார்த்து பிறகு அவர் ஒரு நியூரோவை பார்க்க சொல்லி அவர் இவர்களை ஒரு MRI ஸ்கேன் எடுக்க சொல்லி பிறகு இதை கண்டு பிடித்தார்கள். இந்த ஒரு நாள் கூத்திற்கு கிட்ட தட்ட பத்தாயிரம் மேல் செலவு. என் வீட்டுக்காரர் ஏற்க்கனவே சென்னை என்றால் அலறுவார் எப்பொழுது கேட்கவே வேண்டாம்.

மற்றொரு முறை நாங்கள் விடுமுறைக்கு இந்தியா சென்றுந்தபோது பல் சுத்தம் செய்ய ஒரு பிரபல மருத்துவரிடம் (தென்காசியில்) சென்றோம். அங்கே நாங்க தான் முதல் பேஷன்ட். என் கணவர் முதலில் உள்ளே சென்றார். பிறகு என்னை வர சொன்னார்கள். நானும் சென்று சாரில் அமர்ந்தால் அவர் ஏற்கனவே கையுறை அணிந்திருந்தார். நானும் பரவில்லையே எவர் இவ்வளவு சுத்தமோ என்று வியந்தேன். பிறகு என்னை வாயை திற என்று சொல்லி வாயில் கை வைக்க வரும் சமயம் தான் தெரிந்தது அது ஏற்க்கனவே போட்டது....புதிதில்லை என்று. உடனே நான் பக்கென்று வாயை மூடி வேறு கையுறை போட சொன்னால் அவர் ஏன்மா இதற்க்கு முன் உன் வீட்டுக்காரரை தானே பார்த்தேன் என்றார். எனக்கு வந்தது பாருங்க...இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் மாற்றுங்கள் என்றேன். செய்யறதே தப்பு இதில் அவர் விளக்கம் வேறு.

அதற்காக நான் எல்லோரையும் குறை சொல்லவே மாட்டேன். எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனையில் உள்ளவர்களை (எல்லோரையும்) எனக்கு மிகவும் பிடிக்கும். நாம தான் மூடி வைத்தாலும் மொள மொள திறந்து வைத்தாலும் தல தலவாச்சே.....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தீபா, உங்க பதிவை படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சுப்பா!!!! 2 வயது குழந்தை என்றும் பார்க்காம அதை என்ன பாடுபடுத்தியிருக்காங்க பாருங்க!!!!! இத்தனை டெஸ்ட் எடுத்ததுல குழந்தை எவ்வளவு மிரண்டிருக்கும்? என் குழந்தைக்கும் 2 வயசு தான் ஆகுது, அதனால் என்னால் உங்க குழந்தையின் ரியாக்‌ஷனை முழுசா உணர முடியுது.... இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லையே, அதுவே ரொம்ப சந்தோஷம், பையனை பத்திரமா பார்த்துக்கோங்க... ரம்யா சொன்ன மாதிரி நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த நர்ஸை உண்டு இல்லைன்னு பண்ணிருப்பேன்.... இனிமேல் டாக்டர் பத்தி நல்லா விசாரிச்சுட்டு போங்க...குழந்தைன்னா அவங்களுக்கு விளையாட்டு பொருள் ஆயிடுச்சா?

தேவி!!! நீங்க சொல்லியிருப்பது ரொம்ப கொடுமையா இருக்குங்க, இந்த சின்ன வயசுல அந்த தாய்க்கும் குழந்தைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்க வேண்டாம்... இப்படிப்பட்ட டாக்டர்களை பார்க்கும் போது அப்படியே சுட்டு கொல்லணும் போல் இருக்கு....

என் அனுபவம் மிக கொடுமையானது, இந்த மாதிரி ஒரு டாக்டரின் அலட்சியத்தால் நாங்க எங்க அம்மாவையே இழந்துட்டு நிக்கிறோம்.... 2 வருஷம் முன்னால எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய், ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினோம், அவங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது, அதே ஹாஸ்பிட்டல்ல தான் அதுக்கு சிகிச்சையும் எடுத்துட்டு இருந்தாங்க... இந்த நிலையில் அவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏத்த வேண்டியிருந்தது,
அந்த டாக்டர் என் அம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் நார்மலான் ட்ரிப்ஸ் ஏத்திட்டாங்க....டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்துட்டோம்... அன்னைக்கு நைட் ஆரம்பித்தது வினை...அம்மாவால் உட்காரவே முடியல, தொடர்ந்து வாந்தி எடுத்துட்டே இருந்தாங்க, கை விரலில் பலமே இல்ல, ஒரு சாதரண டம்ளரை கூட அவங்களால பிடிக்க முடியல...மறுநாள் திரும்பவும் அதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினோம், முந்தைய நாள் அவங்க பண்ணின தவறுல தான் அம்மாவுக்கு இப்படி ஆச்சுன்னு எங்களுக்கு அப்ப தெரியல.... நேரம் ஆக ஆக என் அம்மாவின் உடல்நிலை மோசமாகிட்டே போச்சு... சுகரும் 600-ஐ தொட்டுடுச்சு,அதனை குறைக்கனும்னு அந்த டாக்டர் சொன்னாரே தவிர அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவே இல்ல.... ஐசியு-ன்னு பேரு, ஆனா எல்லோரும் சர்வ சாதாரணமாய் வருவதும் போவதுமா இருந்தாங்க...நர்ஸ்களை பற்றி சொல்லவே வேண்டாம், அப்படி ஒரு சிடுமூஞ்சிங்க, எது கேட்டாலும் கோபம் தான் பதில், இப்படியே ஒரு அல்ட்சியத்தோடவே அம்மாவை பார்த்ததால் நைட் 12 மணிக்கு அவங்க 2 கிட்னியும் பழுதாகிடுச்சுன்னு சொல்ல, எங்களுக்கு தூக்கி வாரி போட்டது... உடனே மதுரை மீனாக்‌ஷி மிஷனுக்கு கொண்டு போக சொல்லிட்டாங்க, எங்க அப்பாவுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை அவர் ஒரு பக்கமா உட்கார்ந்து அழுதுட்டே இருந்தார்... சரி அம்மாவை ஆம்புலன்சில் கூட்டிட்டு
போகலாம்னு அப்பா டாக்டரை பார்க்க போனா, அந்த ஆள் என்ன செஞ்சான் தெரியுமா? ஹாயா சேர்ல உட்கார்ந்துட்டு “இருங்க உங்க பில் ரெடி ஆகிட்டு இருக்கு,கட்டிட்டு அப்புறமா பேஷண்டை கூட்டிட்டு போங்க”அப்படின்னு சொன்னானாம்.... என் அம்மாவின் உயிர் அங்க ஊசலாடிட்டு இருக்கு, ஆனால் அதெல்லாம் அந்த டாக்டருக்கு ஒரு பொருட்டே இல்லாம என்ன ஒரு பணப் பேயா இருந்திருக்கான்னு பாருங்க.... அப்புறம் எல்லாம் முடிஞ்சு என் அம்மாவை மதுரைக்கு கொண்டு போனோம், ஆனால் வரும் வழியிலயே அம்மா உயிர் பிரிஞ்சுடுச்ச்சுன்னு சொல்லிட்டாங்க... அதை கேட்டதும் நாங்க என்ன
பாடு பட்டிருப்போம்? அந்த டாக்டர் மட்டும் பணத்தை விட என் அம்மாவின் உயிரை பெருசா மதிச்சிருந்தா என் அம்மாவை காப்பாற்றி இருக்கலாம், இன்னைக்கு அவங்களும் எங்க கூட இருந்திருப்பாங்கள்ல!!! என் குழந்தை பிறந்து சரியா ஒரு மாதம் ஆயிருந்த நேரம் அது, நான் அனுபவிச்ச வேதனைய வார்த்தையால சொல்ல முடியல... அப்படி ஒரு நரக வேதனை....ஒரு நாள் தான் சரியா ஒரே நாள் எங்க அம்மாவின் உயிரை எமனா வந்து அந்த டாக்டர் குடிச்சுட்டான்... அதிலிருந்து ஹாஸ்பிட்டல்னு சொன்னாலே எனக்கு ஒரே பயம் தான்... எதாவது படத்தில் ஹாஸ்பிட்டல் சீன் வந்தாலே என்ன அறியாம அழ ஆரம்பிச்சிடுவேன்... அந்த சீனை பார்த்தா என் அம்மா கடைசி நிமிடங்கள்ல இருந்த மரண படுக்கை தான் நியாபகம் வரும்... இதற்கு மேல் என்னால் சொல்ல முடியல.....

-ஜெயந்தி

ஆமா ஜெயந்தி நீங்கள் சொல்லுவதும் கொடுமையான விஷியம். டாக்டர் களுக்கு உயிரின் மதிப்பு தெரிவேமாட்டுது. அவர் படிப்பதற்க்கு ஆனா செலவு மட்டும் தான் அவுங்க கண்னுக்கு தெரியும் போல அதான் பணமே குறிக்கோளா இருக்காங்க. இதுகளா திருத்தவே முடியாதா??????????

நிர்னயிக்கபட்ட கல்வி கட்டணம் னு அரசு சட்டம் கொண்டு வந்து இருக்க மாதிரி இந்த டாக்டர்ஸ்களுக்கும் ஏதாவது சட்டம் கொண்டுவந்தா நல்லா இருக்குமோனு தோனுது பா.

உன்னை போல பிறரையும் நேசி.

சாரி பா, உங்க பதிவ இன்னைக்கு தான் பார்த்தேன், இப்ப என் பையனுக்கு ஜூரம் சளி குறைஞ்சு இருக்கு ... முக வீக்கம் குறைய கொஞ்ச நாள் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க... உங்க பிராத்தனைக்கும் அக்கறைக்கும் ரொம்ப நன்றி பா....

உங்க அம்மாக்கு ஏற்பட்ட நிலை ரொம்ப கொடுமையானது பா... பணம், பணம்ன்னு அலையுற இது மாதிரி டாக்டர்களுக்கு அவங்க கேக்கரத விட பத்து மடங்கு பணம் கொடுத்தால் அவர்களால் போன ஒரு உயிரை மீட்டு தர இயலுமா? பன முதலைகள்.... என்னைக்கு தான் இந்த மாதிரி கொடுமைகளுக்கு விடிவு காலம் வருமோ?

நான் குறிப்பிட்ட கிளினிக் திருவல்லிக்கேணியில் உள்ளது, டாக்டர் பெயர் ஜகதீஷ். அவரை பற்றி நல்ல விதமாய் எங்களுக்கு தெரிந்தவர் சொன்னதால் சென்று மாட்டிகொண்டோம்..

அந்த நர்சுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் பா, அவள் குழந்தையை எப்படி பார்த்து கொள்வாளோ தெரியவில்லை, ஆனால் அடுத்தவர் குழந்தை என்றால் இவ்வளவு அலட்சியம்... என் அம்மாவும், இவளும் குழந்தை பெற்றவள் தானே எப்படி மற்ற குழந்தையிடம் ராட்சசி போல நடந்து கொள்கிறாள் என்று வருந்தினார்... எனக்கும் கோவம் வந்தது, அவள் கையில் இருக்கும் ஊசியை பிடுங்கி அவளுக்கு அதே மாதிரி குத்த வேண்டும் என்று..... என்ன செய்வது என் கோவத்தை விட குழந்தையின் கதறல் அங்கிருந்து வெளியேறினால் போதும் என்றாகி விட்டது...

தீபா, தேவி நீங்க 2 பேர் சொல்றதும் சரி தான்....இப்ப இருக்கும் டாக்டர்ஸ் எல்லாமே பணப்பேயா மட்டும் தான் இருக்காங்க.... இதே நிலமை அவங்க வீட்டில் யாருக்கும் வராதா என்ன? அப்ப இவங்க என்ன செய்வாங்களாம்?

கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் போன என் அம்மா உயிரை யாராவது திருப்பி தர முடியுமா? என் அம்மா ரொம்ப பாவம், அவங்க வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் அவங்க பெத்த பிள்ளைங்களான நாங்க யாரும் கூட இல்லாத மாதிரி சூழ்நிலை ஆகிடுச்சு,அப்ப அவங்க மனசு என்ன பாடு பட்டிருக்கும்? எவ்வளவு ஏங்கி இருக்கும்? இன்னைக்கு வரை கூட அது என் மனசுல ஒரு குற்ற உணர்ச்சியா படிஞ்சு போயிருக்கு.... இதுக்கெல்லாம் காரணமான அந்த டாக்டரை என்ன செய்ய முடிஞ்சது? அந்த ஆள் இப்பவும் பணத்தை சுருட்டி சுருட்டி பையில் அடைச்சுட்டு தான் இருக்கான்... எல்லாம் விதி!!!!

-ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்