டாக்டர்கள், நர்ஸ்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

தோழிகளே எனக்கு நேர்ந்த ஒரு மிகவும் மோசமான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. கடந்த ஒரு வாரமாக என் இரண்டு வயது மகனுக்கு சளி மற்றும் ஜுரத்தால் உடல் நிலை சரி இல்லை, முகம் வீங்கி கழுத்து மற்றும் காதின் பின் புறம் நெறி கட்டி இருந்தது.. நாங்கள் வழக்கமாக காண்பிக்கும் டாக்டர் என் மகனை பரிசோதித்து விட்டு பயப்பட வேண்டாம் சளியினால் முகம் வீங்கி நெறி கட்டி இருக்கிறது, ஒரு வாரம் அவர் கொடுக்கும் மருந்தினை கொடுத்து பின்பு கூட்டி வரும் படி கூறினார். நான் தொடர்ச்சியாக மருந்து ஐந்து நாட்கள் கொடுத்ததும் குழந்தை உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சளி ஜூரம், முக வீக்கம் எதுவுமே குறைய வில்லை.. எங்கள் மருத்துவர் ஊரில் இல்லாததால், எங்களுக்கு தெரிந்தவர்கள் சிலர் அவர்களுக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரிடம் செல்லும்படி கூறினர். நாங்களும் வேறு வழி இல்லாமல் அந்த மருத்துவரிடம் சென்றோம். அவர் என் குழந்தையை பரிசோதித்து கூட பார்க்காமல், மகனின் முகத்தை மட்டும் பார்த்து இந்த கேஸ் உடனே அட்மிட் பண்ணனும் என்றார். நான் உடனே பதறி என்ன என்று கேட்பதற்குள், உங்கள் குழந்தையின் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து இருக்கிறது அதான் முகம் வீங்கி இருக்கிறது என்றார். எனக்கு தலையை சுற்ற ஆரம்பித்து விட்டது, சமாளித்து கொண்டு இல்லை டாக்டர் இவனுக்கு சளியினால் இப்படி இருக்கிறது என்றேன், அதற்க்கு அவர் நீங்கள் மருத்துவரா இல்லை நானா, உடனே நிறைய பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட லாபிர்க்கு நிறைய டெஸ்ட் எழுதி கொடுத்து, குழந்தைக்கு எதுவும் ஆகாமல் பிழைக்க வேண்டி கொள்ளுங்கள் என்றார்.. எனக்கோ ஸ்தபித்த நிலை, ஆண்டவா என்று அழ கூட திராணி இல்லாமல் அவர் கூறிய லாபிர்க்கு சென்று அனைத்து டெஸ்டும் எடுத்து முடித்தோம், ரிசல்ட் வருவதற்குள் நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை, ரிசல்ட் எல்லாம் நார்மல் என்று வந்த பின் தான் எங்களுக்கு உயிரே வந்தது.. ரிசல்ட் வருவதற்காக நாங்கள் வெயிட் செய்த அந்த ஆறு மணி நேரம் நரக வேதனை, வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை.. ரிசல்ட்டை அந்த டாக்டரிடம் கொண்டு சென்றால் அவர் முகத்தை கடு கடு என்று வைத்து கொண்டு எல்லாம் நார்மல்லா, சரி ஒரு ஊசி போட்ட எல்லாம் சரி ஆகி விடும் என்று நர்சை ஊசி போடா சொன்னார், அந்த நர்ஸ் அந்த டாக்டரை விட மகா சிடு மூஞ்சி, நான் குழந்தையை சரியாக பிடிபதர்க்குள் ஊசியை போட்டு விட்டார், என் குழந்தை வலியால் திமிறி அவர் குத்திய ஊசி வளைந்து விட்டது, வலியால் துடிக்கும் என் மகனை சமாதானம் செய்வதா இல்லை தவறாக ஊசி குத்திய அந்த நர்சை கடிந்து கொள்வதா? ஏன் இப்படி அவசர படுகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் ஒருவர் தான் எங்களுக்கு பேஷண்ட்டா எவ்ளோ பேர் நாங்க பார்க்கணும் கிளம்புங்க என்றாரே பார்க்கலாம்... காலையில் இருந்து ஏற்பட்ட மன உளைச்சலால் அவர்களிடம் கோப பட கூட முடியாத சோர்வில் அங்கிருந்து கிளம்பினோம்.. இத்தனைக்கும் அந்த மருத்துவர் ஒரு நோயாளியை மூன்று நிமிடம் கூட பார்பதில்லை, அவர்கள் கிளம்புவதற்குள் அடுத்த நோயாளியை வர சொல்லிவிடுகிறார்... மருத்துவம் எவ்வளவு புனிதமான தொழில், கடவுளுக்கு அடுத்த படியாக நாம் நம்புவது மருத்துவரை தான், அத்தகைய உயர்வான பணியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.. வசதியற்றவர்கள் செல்லும் இலவச மருத்துவமனையில் தான் இத்தகைய கேவலமான நடவடிக்கைகள் நடக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு கன்சல்டறேஷன்நிற்க்கு 200 ருபாய் வாங்கும் இத்தகைய கிளினிக்களிலும் இவ்வாறு நடத்த படுவதை என்ன வென்று சொல்வது? மருத்துவம் முழு வியாபாரம் ஆகி விட்ட இந்த காலத்தில் நிறைய டாக்டர்களும் நர்சல்களும் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றனர்.. சேவை என்று இருந்த இந்த தொழில் அடியோடு மாறி ஒவ்வொரு நொடிக்கும் பணம் பணம் என்ற நிலை ஆகி விட்டது...

நலமா.. துர்கா குட்டி எப்பிடி இருக்கா.ஊருக்கு வந்துட்டு போன்னீங்களா..உங்க பதிவை பார்த்ததும் 8 மாதத்திற்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வந்துடுச்சு..உங்க அம்மாவை பார்த்த அதே டாக்டரிடம் தான் நானும் மாட்டின் கொண்டேன்.ஏ.சி இல்லாத வார்டைதான் அந்த ஹாஸ்பிடலில் ஐ.சி.யு என்கிறார்கள்.முதலில் நாங்கள் போனது என் பக்கத்து வீட்டில் முன்பு குடியிருந்த டாக்டரிடம்தான் போனோம்.ஏனென்றால் முன்பு ஒரு முறை பயஙகரமாக வேர்த்து அதற்காக இவனிடம்தான் போனோம். இந்த முறை அதே போல் வேர்த்து நமக்கு தெரிந்த டாக்டர்தானே என்று அங்கே போனோம். அங்கே போனால் நர்ஸ் டாக்டர் இல்லைஇ மகளின் பிறந்த நாள் பார்ட்டி முடித்து 2மணி நேரம் லேட்டாடகதான் வருவார் என்றள். பக்கத்து வீட்டு ராதாக்க ஹஸ்பெண்ட்னு போன்ல சொல்லும என்றேன். நர்ஸ் போனில் விசயத்தை சொல்ல அவன் டை குலொபினாக் இஞேக்சன் போட சொல்லி நரசும் ஊசி போட்டாள்.நான் ஏம்மா இவருக்கு அதிகமா வியர்வையோட வலியும் இருக்கு பெயின் கில்லர் இஞெக்சன் போடறெ சிம்டம்ஸ் பார்த்தா அட்டாக் மதிரி தெரியுதேன்னு கேட்க அதென்னமோ டாக்டர்ட்ட சொன்னதற்கு இந்த ஊசியைதான் போட சொன்னார் என்றாள்.இவர் தோள்பட்டையை பிடித்து கோண்டு வலிய்யில் கதறுகிறார். வேறு வழியில்லமால் உன் அம்மாவை காட்டிய டாக்டரிடம்தான் காட்டினோம்.அவர் 4மணினேரம் போகட்டும் அதன் பிந்தான் சோல்ல முடியும் என்றார். அதன் பின் என் டாக்டர் அண்ணனிடம் விபரம் சொல்லி அவர் ஊரில் வந்து இந்ட்த டாக்டரிடம் பேசி அட்மிட் செய்த ஐ.சி.யுவில் இவரை பார்த்து இதென்ன ஐசியு இப்பிடி இருக்கு ஆ.சி இல்லாம என்றார்.ஆக்சிஜன் வரும் பைப் கனெக்சன் ரிப்பேர்.பிரசர் பார்க்கும் கருவியும் ரிப்பேர். பிரசர் பார்த்த நர்ஸே சே இந்த மெசின் சரிய ஒர்க் பண்ண மாட்டேதுனு வேற எடுத்து வந்து பார்ப்ப அதுவும் கரெக்டா ரேடிங் காட்டாது.பேப்பரில் இந்த டாக்டரின் பெயர் நாறித்தான் போனது. ஆனால் அவசரத்திற்கு இவர்தானே இருக்கிறார் என்று உட்கார இடம் இல்லாமல் கூட்டம்தான்..வியாபார உலகத்தில் மனித நேயம் இறந்துவிட்டது என்றுதான்சொல்ல வேண்டும்.

radharani

இங்க அநியாயத்துக்கு பவர்கட்...முந்தின பதிவை பொடுரதுக்குள்ள 6தடவை கரண்ட் கட் .அவசர டைப்பிங்னால சாரி பிழை அதிகமா இருக்கு..

radharani

தோழிகள் தீபா ஜெயந்தி லாவன்யாவின் பதிவுகள் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். இப்படிப்பட்ட டாக்டர்களை கண்டிப்பாக டாக்டர் மற்றும் ஹாஸ்பிடல் பெயர்களைக் கூறி அனைத்து தோழிகளுக்கும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
தோழி தளிகா கூறியது போல
..."வெளிநாடுகளில் நம்மூர் மருத்துவர்கள் அளவுக்கு திறமைசாலிகள் இல்லை. இருந்தாலும் கஸ்டமர் சர்வீஸ் என்ற ஒன்றுக்கு மதிப்பு கொடுத்து மருத்துவமனை முதல் மிட்டாய்கடை வரை முகம் கோனாமல் நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்..நம்மூரில் என்னவோ எல்லோருக்கும் கொம்பு முளைத்தது போல் காட்டிக் கொள்வார்கள்..மருத்துவமனையில் கூத்து சொல்லவே வேண்டாம்.எனக்கு ஊருக்கு போனால் எங்குமே போகவே விருப்பமே"

இது நூற்றுக்கு நூறு உண்மை தோழி.
இதற்கு தோழிகள் அனைவரும் தஙகள் ஊர்களில் தெரிந்த நல்ல டாக்டர்களையும், இது போன்ற பணப்பேய் பிடித்த டாக்டர்களையும் அடையாள்ம் காட்ட வேண்டும்..
இதன் மூலம் இது போன்ற கசப்பான அனுபவங்களை நம்மால் முடிந்தளவு தடுக்கலாம்..

நன்றி

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் deliveryoda நான் மூன்று வருடம் கழித்து consive ஆனேன் அம்மா வீடான் சென்னைக்குப்போனேன் செக்கப்புக்கு ராமசந்திரா hospital போனேன் முதல் செக்கப் என் report பார்த்திட்டு பாரின்இருந்து வந்தியா கேட்டாங்க நானும் ஆமா சொன்னேன் medical insurance
இருக்கான்னுகேட்டார் dr.நான் இல்லை சொன்னென் அடுததவாரம் சுகர் செக் பன்னனும் சொன்னார் நானும் இரவு காலை 7மனிவரை பசி அடக்கிபோனல் கர்ப்பிணி பார்காமா 8மனிக்குதான் டெஸ்ட் பன்னுவோம் சொல்லுது நர்ஸ் சரின்னு 8மணியிலிருந்து 12மணிவரை எடுத்தி report வாங்கிட்டு டாக்டர் kita ponaஉங்களுக்கு சுகர் இருக்கு இன்சுலின் போட்டு தான் குறைக்கனும் அட்மிட் பண்ணுங்க இல்லை குழந்தைக்கு இறந்து போயிரும் சொன்னார் என் நிலைமை பாருங்க என் வீட்டில் இதுதான் முதல் குழந்தை அதுவும் மூன்றுவருடம் கழித்து நல்லவேளை என் கணவர் என் கூட இருந்தார். dr enkita sharing room தனி room எடுக்கிரிங்களா கேட்கிறார். admit slip எல்லாம் போட்டு கொடுத்துவிட்டார் என் கணவர் சரி நாங்க காலையில் வருகிறோம் சொல்லிட்டு வந்தார் அப்புறம் பக்கத்தில் உள்ள hospital போய் sugar test எல்லாம் எடுத்தால் எல்லாம் normal வருது அப்புறம் அங்கே delivery எல்லாம் பார்த்தேன் டாக்டர் நர்ஸ் அவ்வள்வு நல்லாப்பார்த்தாங்க பெரிய hospital போய் கஸ்டப்பட்டது தான் மிச்சம் அன்றுமட்டும் இன்னோரு dr consult பண்ணலாம் என் கனவர் மட்டும் முடிவு பன்னவில்லை என்ரால் என் நிலைமை நினைத்துக்கூட பார்க்கமுடியாது

வாழ்க வளமுடன்

அன்பு தீபு, இப்ப தான் உன் இழையை படிச்சேன் பா. தாமதமான விசாரிப்புக்கு மன்னிக்கனும். நீ சொன்னதை கேக்கும் போதே மனசே பதறிப்போச்சு. ஊசி போடும் போது ஊசியே வளைந்து போனதை சொல்லும் போது எத்தனை வலித்தது. பாவம் அந்த சிறுகுழந்தை எப்படி தாங்கியிருப்பான் அந்த வலியை. இப்ப குழந்தை எப்படி இருக்கான்? நீ லீவு போட்டுட்டு அவன் கூட ஒரு 2 நாள் இருப்பா. எல்லாம் சீக்கிரமே சரியாகும். இப்படியும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்றாங்க.

என் குழந்தைகள் பிறந்தது முதல் எந்த ஒரு உடல்நலக் குறைவு அவங்களுக்கு வந்தாலும் நான் ஒரே ஒரு குழந்தைகள் நல மருத்துவர் கிட்ட மட்டும் தான் காட்டிட்டு இருந்தேன் தீபு. ரொம்பவும் தங்கமான மனிதர். ஒவ்வொரு குழந்தைங்க கிட்டயும் தனி கேர் எடுப்பார். உனக்கே அந்த டாக்டரை தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். முன்னாடி அஜாக்ஸ்ல ஆகாஷ்ல வைத்தியம் பார்ப்பார். இப்ப ராஜாகடைல பார்க்கறாராம். ஏற்கனவே அவரோட டிஸ்பென்சரி அங்கே தான் இருந்தது. பேர் இளங்கோவன். என் ரெண்டு குழந்தைகளோட முதல் பிறத நாளுக்கு ரெண்டு பேரையும் பெட்ல அட்மிட் பண்ணி வச்சிருந்தேன். பையன் யூரின்ல கையை வச்சு மறுபடி வாய்ல வச்சுகிட்டதால இன்பெக்ஷன் ஆகி டயரியா, ஜூரம் வந்து அட்மிட் பண்ணி வச்சிருந்தோம். பொண்ணுக்கு டெங்கு பீவர் வந்து அட்மிட் பண்ணியிருந்தோம். அந்த சமயத்துல பையனுக்கு ப்ளட் டெஸ்ட் அதே ஆஸ்பத்தரியில தான் பண்ணோம். அங்கே வேலை செய்த பொண்ணு பெரியவங்களுக்கு ரத்தம் எடுக்கற மாதிரி காட்டு மிராண்டி தனமாக குழந்தையிடனும் ரத்தம் எடுத்தாள். அது தெரிஞ்சு அந்த டாக்டர் அந்த பொண்ணை கூப்பிட்டு கோபத்தோடு கண்டிச்சு அனுப்பி வச்சுட்டு அவரே ரத்தம் எடுத்து லேபுக்கு அனுப்பினார். அங்கே குழந்தையை அட்மிட் செய்திருந்த போது லேட் நைட் என்று கூட பார்க்காமல் போன் பண்ணி குழந்தையின் நலனை விசாரிச்சு தெரிஞ்சுப்பார். நார்மலாக அனைவருமே டோக்கன் வாங்கிட்டு தான் டாக்டரை வரிசைப்படி பார்க்க முடியும். ஆனால் குழந்தையின் உடல்நிலை பொறுத்து அந்த குழந்தைக்கே அதிக முன்னுரிமை கொடுத்து வைத்தியம் பார்ப்பார். இன்றைக்கும் என் குழந்தைகளுக்கு எதாவது உடல்நலக்குறைப்பாடு வந்தால் அந்த டாக்டருக்கு தான் போன் பண்ணி கேட்டு மருந்துகளை தருவேன். முகம்சுளிக்காமல் எந்த நேரமானாலும் பொறுமையோடு பதில் சொல்வார். பீஸ் எதுவும் வாங்காமலே. பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்துக் கொண்டு மருத்துவம் பார்க்கும் வியாபாரிகளுக்கு இடையே மனிதாபிமானத்தோடு தான் ஏற்ற தொழிலை செய்து வரும் இவர் போன்ற அரிதான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தீபு, உனக்கு ராஜாகடை பக்கம் தானே இனிமே நீ குழந்தைக்கு வைத்தியம் தேவைப்பட்டா இந்த டாக்டர்கிட்டயே போ பா.

கவலைப்படாதே தீபு. குழந்தைங்கங்க ஒரு குறிப்பிட்ட வயசு வர்ற வரைக்கும் இப்படித்தான் எதாவது நோய் வந்து படுத்தி எடுக்கும். எல்லாமே சீக்கிரமே சரியாகும். த்ரிக்காக நான் கடவுள் கிட்ட ஸ்பெஷல் பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஒரு சில டாக்டர்களை தவிர மற்ற டாக்டர்கள் அனைவருக்குமே தாயின் வயிற்றில் பிறக்காமல் வானத்திலிருந்து நேரடியாக பூமிக்கு குதித்த கடவுள் அவதாரங்கள் என்ற நினைப்பு அவர்களுக்கு. திறமையாக படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் மருத்துவ படிப்புக்கு வருவதில்லை. குறுக்கு வழியில் பணம் செலவழித்து டாக்டர் தொழிலுக்கு வருபவர்களால் எப்படி சரியான முறையில் வைத்தியம் பார்க்க முடியும்?.
மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் கால்நடை டாக்டர்கள் கூட மாட்டிற்கு வலிக்காமல் ஊசி போடுமளவிற்கு தன் கடமையை உணர்ந்து செய்கிறார்கள். சின்ன குழந்தைக்கு ஊசி போடும் போது எப்படி போட வேண்டும் என்று கூட தெரியவில்லை என்றால் அந்த நபரை டாக்டர் என அழைப்பது அந்த தொழிலை கேவலப் படுத்துவதை போல.

அன்புடன்
THAVAM

உங்க கனிவான விசாரிப்புக்கு ரொம்ப நன்றி பா.. இப்ப த்ரிஷி குணம் அடைந்து விட்டான்... அனைத்து தோழியரின் பிராத்தனைக்கும் நன்றி... நான் நாலு நாள் லீவ் போட்டுட்டு என் பையன் கூடத்தான் இருந்தேன்... இப்பதான் எனக்கு ரிலாக்ஸா இருக்கு... கல்ப்ஸ் எனக்கு திருவற்றியூர் சைடு டாக்டர்ஸ் யாரையும் தெரியாது பா.. இவன் பிறந்தது முதல் அம்மா வீடு இருக்கும் ஏரியாவில் உள்ள டாக்டரிடம் தான் காண்பித்தத் வருகிறேன்... அந்த டாக்டர் ஊரில் இல்லாததால் இவ்வளவு துயரத்துக்கு ஆள் ஆனோம்.... நீங்க சொல்லும் டாக்டர் பத்தி கேள்வி படவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு... இந்த தொழிலில் இந்த மாதிரி நல்ல டாக்டர்களும் இருக்கிறார்களே என்று... நல்ல உள்ளத்தோடு அந்த டாக்டரை பற்றி குறிபிட்டதர்க்கு நன்றி பா.. என்னவரிடம் அந்த டாக்டரை பற்றி சொல்கிறேன்

As u said there must be strict Rules should be brought to punish the errant Doctors. But as per IMC (Indian Medical Council) no doctor's licence is cancelled permanently in India for the period from 2008 to till date. But in abroad atleast 50 to 60 doctors' licence was cancelled permanently per year. They are not supposed to practice as doctors anymore. Is that means that more doctors are bad abroad, while in India all the doctors are good?. (please view Actor Amirkhan's tv show Satyamave jayate).

நீ எதை விதைக்கின்றாயோ அதை தான் அருவடை செய்ய முடியும்.

எனக்கு இது போல் சில நிகழ்வுகள் நடந்ததுண்டு.

எங்க கம்பனி அக்கமடசன்லையே ஒரு கிளினிக் உண்டு அதில் ஒரு மருத்துவர் இரண்டு நர்சுகள் உண்டு. அப்பா ஏன் குழந்தைக்கு ௧ ௧/௪ வயசிருக்கும். திடீரென்று இரவு ௧௧ மணி அளவில் அவள் பாடமும், கையும் வீங்கி இருந்தது. அன்று தான் நான் சேரலாக் ஒரு புது பரந்து இரவு ௯ மணியளவில் ஊட்டி இருந்தேன். ஒரு வேலை அது புத் அலர்ஜியா இருக்குமோனு சந்தேகிச்சு. டாக்டரிடம் காண்பிச்சோம், அந்த பெண் டாக்டர் எந்த டேஸ்டும் பண்ணாமல் உங்கள் குழந்தைக்கு கிட்னி ப்ராப்ளம்னு சஸ்பெக்ட் பண்ணுறேன், நீங்க உடனே பெரிய ஹாச்பிடல்க்கு எடுத்திட்டு போங்க நு சொல்லிடாங்க... அந்நேரத்துக்கு கம்பெனி கார் திரிவாரும் இல்லை, கூட தங்கியிருந்த கார் ஊட்ட தெரிந்த ஒருவரை கூட்டிட்டு நைட் பனிரெண்டு மணியளவில் மருத்துவமனையை அடைந்தோம். உடனே ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை எல்லாம் பண்ணினாங்க, பிரச்சனையை என்ன என்றால் குழந்தை மருத்துவர் இரவில் வர மாட்டாராம். மறுநாள் காலை ௧௧ மணியளவில் தான் வருவாராம். அதற்க்கு அவ அழ அழ கைகளில் ஊசி குத்தி இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் எத்தி முடிச்சாச்சு. பின் குழந்தை மருத்துவர் வந்து பார்த்திட்டு ஆடு வெறும் பூச்சி கடி தான் இப்பவே நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிட்டாரு. இடு தான் ஒரு கொடுமைனால்.

இதே போல் மறுமுறை அதே பெண் மருத்துவர் எனக்கு வஜினால் இன்பெக்சன் இருந்ததற்கு செர்விக் கான்சர் நு சஸ்பெக்ட் பண்ணுறேன்னு சொல்லிட்டா. என துரதிஷ்டம் அதை அடுத்த ஒரு வாரத்திற்கு எங்களால் வெளியில் செல்ல முடியவில்லை. அந்த ஒரு வாரமும் என் நிம்மதி போச்சு தூக்கம் போச்சு, என் மனதுக்குள் ஒரு முடிவே பண்ணிட்டேன், அப்படி கண்டிப்பா கான்சர் இருந்தால் நான் தற்கொலை பண்ணிகனும்னே.. கடைசியா ஒரு வாரம் கழிச்சு கைனகாலஜிஸ்ட் போய் பார்த்தோம். அவர் பயப்பட ஒன்னும் இல்லை இது ஜஸ்ட் இன்பெக்சன் தான்னு சொல்லிடாரு. அப்பறம் தான் நிம்மதியே வந்திச்சு.

இப்படியும் சில மருத்துவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட மருத்துவத்தின் புனிதத்தையே கெடுக்கும் மருத்துவர்கள் பற்றி சொல்லும்போது. ஒரு உன்னதமான மருத்துவரை பற்றியும் சொல்லியே ஆகணும்.

அந்த நேரம் நான் ௪ மாதம் கர்பமாக இருந்தேன் என்னை இந்தியா அனுப்பிவிட்டு என கணவர் இந்தோனேசியா திரும்பியதும். கடுமையான காய்ச்சல். அப்பொழுது எங்கள் கிளினிக்கில் வேறொரு மருத்துவர் இருந்தால். முக்கியமாக அந்த நேரம் பண்ணிக்க்காயச்சளால் அநேகம் பேர் இறந்துகொண்டிருந்த நேரம். என் கணவரின் சிம்டம்சை பார்த்தே யூகித்த அந்த மருத்துவர் ரத்த பரிசொதைன்னு அனுப்பினார். இங்கே காலை பரிசோதனை செய்தால் மதியமே ரிசல்ட் வந்திருச்சு. அந்த மருத்துவர் என் கணவரிடம் உங்களுக்கு டெங்கு காய்ச்சல் தான் ஒரு வாரம் இங்கே அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பண்ணனும்னு சொல்லி அப்படியே செய்தார். என் கணவரும் பூரண குணம் அடைந்து அடுத்த மூன்று மாதத்தில் என்னை காண இந்தியா புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் அந்த மருத்துவர் என கணவரிடம் உண்மையை கூறி இருக்கிறார். அதாவது என் கணவருக்கு வந்தது டெங்கு காய்ச்சல் இல்லை, பன்றி காய்ச்சல் என்று. அவர் சொன்னது ஏன் அந்த நேரம் உண்மையை மறைத்தேன் எனில் பன்றி காய்ச்சல் என்றால் அந்த நேரம் அந்த பயமே உன்னை கொன்றிருக்கும் என்று. இவரல்லவோ மருத்துவர்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்