பொன்னியின் செல்வன் யார் உங்கள் சாய்ஸ்

ஹாய், ஹாய்

நம்ம மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை, திரைப்படமாக எடுத்துகிட்டு இருக்கார்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, பொன்னியின் செல்வனாக விஜய், வந்தியத்தேவன் ஆக ஆர்யா நடிக்கப் போகிறாங்களாம்!!

சரி, இந்த ரெண்டு கேரக்டர்களுக்குத்தான் நம்மகிட்ட கேக்காம அவங்களாக டிஸைட் பண்ணிட்டாங்க:):)

மத்த கேரக்டர்களுக்கு உங்க செலக்‌ஷன் யார்? யார்?

வணக்கம் மணி.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கும் முடிவு கைவிடப்பட்டு விட்டதாக வதந்தி உலவிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த பதிவு, அந்த நாவலின்(?!) ரசிகையான எனக்கு கொஞ்சம் மனதிற்கு தெம்பு அளிக்கிறது.

உண்மையில் அதில் விஜய்-தான் வந்தியத்தேவன், ஆர்யா-தான் அருள்மொழி வர்மனாக நடிப்பதாக கேள்வி. ( நன்றி-தமிழ் வாரப்பத்திரிக்கைகள்)

இன்னும் சில முடிவு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள்:

குந்தவை-அனுஷ்கா
துறவி- சத்யராஜ்
ஆதித்தன் - மகேஷ் பாபு
மற்றும் பிரியங்கா சோப்ரா கூட உண்டாம்.

மேலும் சில பதிவுகள்