food for my 6 months old child

hai everyone. nan oman il husband mattrum 6 madha baby yudan erukieren. formula milk udan, aditional food enna tharuvadhu? nanum work pannaren. so please advice venum.

நீங்க ஆப்பிளை தோல் சீவிட்டு குட்டி குட்டியா நறுக்கி இட்லி பாத்திரத்தில் வேக வைத்து மசித்து கொடுங்கள்.இட்லி கொஞ்சம் காரமில்லாத சாம்பார் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொடுங்கள்.முதலில் கால் இட்லி கொடுங்க.அப்புறம் அரை இட்லி கொடுங்க.இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்க.எந்த சாப்பாடும் முதல் முறை கொடுக்கும் போது கொஞ்சம் கொடுத்து விட்டு அது குழந்தைக்கு ஓத்துக்கொள்ளுதா என்று பார்த்துட்டு அதன் அளவை அதிக படுத்துங்க.கூழ் காய்ச்சி கொடுங்க.உருளைக்கிழங்கு,காரட் வேக வைத்து மசித்து கொடுங்க.
நீங்க ஓமன் - ல இருக்கிறதா சொல்லியிருக்கீங்க.அங்கு Milupa brand like cerelac கிடைக்குதா என்று பாருங்க.அதுல vegetables,orange,honey,fruits wheat&banana நிறைய varieties இருக்கும்.முதல்ல vegetables or honey வாங்கி கொஞ்சம் warm water கலந்து கொடுங்க.cerelac மாதிரி வயிறு நிரம்பும்.ஆனால் முதல கொஞ்சமா தான் கொடுக்கணும்.அப்புறம் அளவை அதிகம் ஆக்கலாம்.அதிலயே Milupa biscuits இருக்கு.அது வேணாலும் வாங்கி கலந்து கொடுங்க.எதுவுமே ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் கொடுங்க.எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கேன்.தோழிகளும் வந்து அவங்களுக்கு தெரிந்ததை சொல்லுவாங்க.அறுசுவை-ல கீழே போய் பார்த்திங்கனா எழுத்துதவி என்று இருக்கும்.அதை பயன்படுத்தி தமிழ் ல எழுதினால் தோழிகள் கருத்து சொல்ல ஈஸியா இருக்கும்.

Expectation lead to Disappointment

ஹாய் சுவர்ணா

எனக்கும் 6 மாத
கொழந்தை இருக்கு பா.அவளுக்கும் நான் இப்பதான்
சாப்பாடு குடுக்க ஆரம்பிச்சிருக்கேன்.நான் கொடுப்பதை சொல்ரேன் உங்களுக்கு
விருப்பம் இருந்தால் நீங்களும் அதை தொடரலாம்.
காலை
9 மணிக்கு செரலக் கொஞ்சம் சுடு நீர் கலந்து கொடுக்கலாம்
மதியம் 12 மணிக்கு ஜுஸ் எந்த பழமாவது ஒன்று
உதாரணம் மாதுளை,ஆப்பிள்,தர்பீஸ்,கேரட்,இது போல் ஒரு நாளைக்கு ஒரு பழம்
கொடுக்கலாம் ஆனால் முதலில் ஒரு பழ ஜுஸை ஒரு வாரம் தொடர்ந்து கொடுது விட்டு
பிறகு வேறு கொடுக்கவும்.பிறகு 2 மணிக்கு சாதம் பருப்பு நெய் விட்டு மசித்து கொடுக்கலாம்
தயிர் சாதம் கொடுக்கலாம்.கீரை சாதம் பால் சாதம் கொடுக்கலாம்,
மாலை 6 மணிக்கு நான் இங்கு பஹ்ரைனில் இருப்பதால் இங்கு கிடைக்கும் farleys rusk or farleys bottel food கொடுப்பேன்,இரவு 9 மணீக்கு இட்லி இல்லை சாதம் கொடுப்பேன்.
இது தவிர ஆப்பில் வேக வைத்து கொடுப்பேன் கேரட் கொடுப்பேன்.இடியாப்பம் செய்து அதை உத்ர்த்து
பால் சேர்த்து கொடுக்கலாம்.இது நான் தினமும் செய்வது இதில் தவறு இருந்தால் அனுபவம் உள்ளவர்கள் திருத்தவும்.நிரைய தண்ணீர் கொடுங்கள்.தினமும் ஜுஸ் முக்கியம்.

ஸ்வர்ணா ஆரியம் முளை கட்டினது(காய வைத்து) ,முந்திரி,பிஸ்தா வுடன் அரைத்து பாலில் கலந்து ஊட்டுங்கள்.நல்லா இருக்கும்.சத்தும் கூட.பிஸ்கட் பாலில் கலந்தும் ஊட்டலாம்.

thank you mam. i will follow u r reply. i will practice next time to write in tamil. bye .

thank you sumathi." ariyam " means what? i dont know please. where u r living?
u have child?

thank you sumathi." ariyam " means what? i dont know please. where u r living?
u have child?

romba nandri. i m trying to do as u said. bye

ஸ்வர்ணா ஆரியம் என்றால் ராகி.எனக்கும் 6 மாத பப்பு இருக்கா.வொர்க் பண்ணி கிட்டு எப்படி பாத்துகிறீங்க?டேக் கேர்.

நான் ஒமன் - ல் இருக்கிரேன். மாட்டு பால் ப்ரெஷ் கிடைக்காது. எப்படி என் 7 மாத குழந்தைக்கு ராகி கஞ்சி எப்படி செய்வது. கொடுக்கலாமா?

மேலும் சில பதிவுகள்