கோஸ் பொரியல்

தேதி: May 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

முட்டைகோஸ் - 200 கிராம்
பீன்ஸ்காய் - 100 கிராம்
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2(கீறியது)
பாசிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய்துருவல் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

முட்டைகோஸ், பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை வறுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் கண்ணாடி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மைக்ரோவேவ் பவர் ஹையில் ஒரு நிமிடம் வைக்கவும்.
பாத்திரத்தை வெளியில் எடுத்து கடுகு, உளுந்து போட்டு திரும்பவும் பவர் ஹையில் ஒரு நிமிடம் வைக்கவும்.
பின் வெளியில் எடுத்து வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு பவர் ஹையில் 2 நிமிடம் வைக்கவும்.
அதன் பிறகு பாத்திரத்தை வெளியில் எடுத்து நறுக்கிய காய், கேரட் மற்றும் உப்பு போட்டு கிளறி திரும்பவும் பவர் ஹையில் 8 நிமிடம் வைக்கவும் (தண்ணீர் ஊற்ற வேண்டாம் காயை கழுவி வைத்த தண்ணீர் போதும்)
காய் வெந்ததும் பாத்திரத்தை வெளியில் எடுத்து வேக வைத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் போட்டு கிளறி விட்டு பரிமாறவும். மைக்ரோவேவ் முட்டைகோஸ் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்ஃபுல் பொரியல் சூப்பரா இருக்கு. அவன் கிடையாது சாதாரண முறையில் செய்து பார்க்கிறேன்.

அழகான சத்தான குறிப்பு. செய்துடறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹமீதா அம்மா,
சுவையான,எளிமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பாத்திமா கலர்புல் பொரியல் நாங்களும் இதுபோலதான் செய்வோம் ஆனால் பாசி பருப்புக்கு பதில் கடலைபருப்பு சேர்ப்போம்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ முதல் ஆளாய் பதிவிட்டதுக்கு நன்றி சீக்கிரம் செய்துட்டு சொல்லுடா வருகைக்கு மிக்க நன்றி

வனி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீக்கிரம் செய்திடனும்

கவி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஸ்வர்ணா வருகைக்கு மிக்க நன்றி