ஆந்திரா சாம்பார்

தேதி: May 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (10 votes)

 

துவரம் பருப்பு - ஒரு கப்
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 8
வர மிளகாய் - 4
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 1
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கேரட் - 2
கத்திரிக்காய் - 4
உருளை - ஒன்று
கொத்தமல்லி - சிறிதளவு


 

முதலில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பருப்பில் தக்காளி, பச்சை மிளகாய், பாதி வெள்ளை பூண்டு, மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர் காய்கறிகள், சாம்பார் பொடி, புளி கரைசல் சேர்த்து ஒரு விசிலுக்கு வைக்கவும்.
தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு, பூண்டு, பட்ட மிளகாய் தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் மிளகாய் தூளும் சேர்த்து கிளறவும்.
அதை சாம்பாரில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சுவையான ஆந்திர சாம்பார் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படி இருக்கீங்க?பையன் எப்படி இருக்கான்?ப.மிளகாய்,வரமிளகாய்,சாம்பார்பொடி,
மிளகாய் தூள் இவை எல்லாம் சேர்ப்பதால் காரம் அதிகம் இருக்குமல்ல.அப்படி தான் காரம் இருக்கனுமா? இன்னைக்கு என்ன சமைக்கிறது என்று யோசிச்சப்ப உங்கள் ஆந்திரா சாம்பார் பார்த்தேன்.அதை செய்யணும் என்று முடிவு பண்ணிட்டேன்.செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் ஆமி.

Expectation lead to Disappointment

assalamu alaikkum amina akka nalla irukingala? unga andra sambar senju pakka poren pathuttu solren

Hi, I am Nivedha: How are you and your family doing.
I am new to this blog: i will try this receipe.

Yes i have made lots of mistake in life!!!
Coz, Life does not come with User's Manual....

hi akka unga profile pathen romba comedya irukku.very intersting bye akka

hai sister......ipa dhan unga sambar ah pathu note pani vachirken!!!!! adha senju pathutu kandipa epdi irundhuchinu solren.......suvaiya irukumnu namburen.......