திருமணங்களுக்கு போடும் மருதாணி டிசைன்

தேதி: May 5, 2011

5
Average: 4.1 (42 votes)

 

மருதாணி கோன்

 

மணிக்கட்டில் 2 ‘v’ வடிவம் வரைந்து அதன் உள்ளே படத்தில் இருப்பது போல் கட்டங்கள் வரைந்து புள்ளிகள் வைத்து நிரப்பவும்.
அதன் மேலே வளைவுகள் வரைந்து ஒவ்வொரு வளைவிலும் வித்தியாசமான டிசைன் கொண்டு நிரப்பவும்.
வளைவின் மேலே மூன்று பூக்கள் வரைந்து அதன் இடையே இலைகளும் வரையவும்.
பூக்களை சுற்றி சற்று இடைவெளி விட்டு பார்டர் போல் வளைவுகள் வரைந்து அதன் மேலே விரல்கள் முழுவதும் படத்தில் இருப்பது போன்ற டிசைன் வரைந்து கொள்ளவும்.
இப்போது முதலில் வரைந்த ‘v’ வடிவத்துக்கு கீழே இன்னொரு ‘v' வடிவம் வரைந்து அதையும் நிரப்பவும். அதன் கீழே இரண்டு மாங்காய் போன்ற டிசைன் வரைந்து நிரப்பவும்.
இரண்டுக்கும் நடுவே இருந்து இலைகளும், அதன் நடுவே பூவும் வருவது போல் வரைந்து கொள்ளவும்.
மேலே வரைந்தது போலவே இங்கும் பூவை சுற்றி சற்று இடைவெளி விட்டு வளைவுகள் வரைந்து, அதன் கீழே இன்னும் சில வளைவுகள் வரைந்து அதை கோடுகள் கொண்டு நிரப்பவும்.
அதன் கீழே படத்தில் உள்ளது போல் டிசைன் வரைந்து கொள்ளவும்.
இப்போது விரல்களில் இருந்த வளைவுகளை நிரப்பவும். விருப்பம் போல மற்ற இடங்களில் முத்து போன்ற டிசைன் வரைந்து முடிக்கவும்.
இது திருமணங்களுக்கு போட கூடிய டிசைன். விருப்பம் போல் இன்னும் அதிகமான வளைவுகள் வரைந்து இன்னும் பெரிய டிசைனாக மாற்றலாம். எல்லாமே வளைவுகளும், நிரப்புவதுமே என்பதால் மருதாணி போட்டு பழக்கம் இல்லாதவர்கள் கூட சுலபமாக போடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனிதா உங்க டிசைன் கொள்ளை அழகு!!!. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு... நானும் டிரை பண்ணி பார்க்கிறேன். ஆனா உங்க அளவுக்கு வருமா என்பது சந்தேகம் தான்.

அன்புடன்
மகேஸ்வரி

ரொம்ப அழகா இருக்கு... எவ்ளோ பொறுமை உங்களுக்கு... :) நானும் போட்டுட்டு சொல்றேன்... :)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

ரெம்ப ரெம்ப ரெம்ப அழகா இருக்கு வனிதா வழக்கம் போல் இன்னுமொரு அழகான design உங்களுக்கு ஒவ்வொரு தடவையும் பதிவு போடனும்னு நினைப்பேன் ஆனால் இப்போது தான் நேரம் கிடைத்தது வாழ்த்துக்கள்

வனி ரொம்ப சூப்பர். நீங்க அழகுகலை நிபுணர இல்லை! கைவினை நிபுணர? என்ன பட்டம் கொடுக்கலாம். இருங்க உங்களுக்கு ஆளினால் அழகு ராணின்னு படம் தந்து ஒரு வைர கிரீடமும் தருகிறேன். உங்கள் அருமையான பணி தொடரட்டும். நானும் இதை என் தங்கையிடம் காட்டி போட்டு விட சொல்கிறேன். (எனக்கு போடா தெரியாது)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் வனி, ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா................. இருக்கு. வாழ்த்துக்கள்..........

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் வனிதா இல்ல இல்ல ஆல் ரவுன்டர் வனிதா மேடம். சூப்பெர் டிசைன். ஸ்டெப் பை ஸ்டெப் விவரிப்பால் எளிதாக புரியுது. என்னுடைய சின்ன குறிப்பு என்னனா இதே டிசைனை கருப்பு & சிவப்பு பயன்படுத்தி போட்டிருந்தால் டிசைன் இன்னும் ஹைலைட்டடாக இருக்கும் என்று நினக்கிறேன். தப்ப எடுத்துக்காதீங்க. ஏனென்றால் மருதாணிஐ போடும் போதுஇருக்கும் பிரைட் நாம் மருதானிஐ எடுத்த பின் வரும் நிறத்தில் இருப்பதில்லை என்று கருதியதால் கூறினேன். ஓகே. எனக்காக அடுத்தமுறை கருப்பு சிவப்பு நிற்த்தில் போட்டுக்காட்டுங்கள். ஓகே வா.தப்பா எடுத்துக்காதீங்க.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. என்னைவிட நல்லா போடுவீங்க... கவலைபடாம ட்ரை பண்ணுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. போட்டுட்டு போட்டோவும் அனுப்பிடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி தோழி. //உங்களுக்கு ஒவ்வொரு தடவையும் பதிவு போடனும்னு நினைப்பேன் ஆனால் இப்போது தான் நேரம் கிடைத்தது// - எனக்கு பின்னூட்டம் தர நினைத்ததே எனக்கு மகிழ்ச்சி தான். மீண்டும் நன்றிகள் பல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. க்ரீடம் கியூட்டா இருக்கு. தங்கை போட சொல்லியே போட்டுக்கங்க... அப்படியே நீங்க தங்கைக்கு போட்டுடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி தேவி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி தோழி. //இதே டிசைனை கருப்பு & சிவப்பு பயன்படுத்தி போட்டிருந்தால் டிசைன் இன்னும் ஹைலைட்டடாக இருக்கும் // - இது தான் புரியல. மருதாணி எப்படி கருப்பு சிவப்பில் போடுறது?? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.... //தப்பா எடுத்துக்காதீங்க// - கண்டிப்பா இல்லை... உங்க ஆலோசனைக்கு நன்றி தான் சொல்லனும். ஆனா தெளிவா சொல்லுங்களேன், அப்ப தான் எனக்கு புரியும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி நலமா?
என்னன்னு சொல்ல அவ்வளவு அழகா செய்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள் வனிதாஜி...இனி நான் யாருக்கும் பதிவு போட முடியாதுபா.
ஏன்னா நான் இந்தியா செல்கிறேன்.இன்னும் 2 நாட்களில்..
உங்க கூட பேசணும் என்று ரொம்ப ஆசை....
டேக் கேர்.....பாய்...

ஹசீன்

சாரி இரண்டு முறை பதிவாகி விட்டது...

ஹசீன்

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :)

இந்தியா வரீங்களா??? விடுமுறையா? எவ்வளவு நாள்? அப்படின்னா இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அடிக்கடி பதிவு பார்க்க இயலாதோ!!! ரொம்ப மிஸ் பண்ணுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனி! இப்படி அசத்துரீங்க?!போட்டோவ பார்த்ததும் அசந்து போய்ட்டேன்!!!!!!!!!!!!என்ன ஒரு அழகு!!!!!!என்ன ஒரு டிசைன்!!!!என்ன ஒரு வடிவம்!!!!!!!!!!நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்,உங்க கிட்ட சிஷ்யையா சேரனும்னு,என்னை உங்க சிஷ்யையா ஏற்றுக் கொள்வீங்களா குருவே?!!!!!!!!!

Eat healthy

வனி ரொம்ப சூப்பர்

Gayathrielango

Be Honest

எனக்கு யாராவது உதவுஙக Pls . எனக்கு ஒரு பல் வளருது.. அதனால சரியா சாப்பிட முடியல. ரொம்ப வளிக்குது ... என்ன பன்றது frineds.....

Gayathrielango

Be Honest

ரெம்ப! ரெம்ப! ரெம்ப!.......... அழகா இருக்கு வனிதா அக்கா

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கடைவாய்ப் பல் கடைசியில் வளருகிறதா? அப்படியென்றால் அதை WISDOM TOOTH என்று சொல்வார்கள். எப்படி இருந்தாலும் பல் மருத்துவரைத்தான் பார்க்கணும்.

பாவம் வனி அழகாக மருதாணி போட்டிருக்கிறார். இது போன்ற கேள்விகளை வேறு இழைகளில் கேட்கலாமே காயத்ரி.

நீங்கள் புதியவராக இருந்தால் அப்படியே அறுசுவையில் சுற்றிச் சுற்றி வாருங்கள். அறுசுவையைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். பல் வலியும் மறந்து விடும்.
அன்புடன்
ஜெமாமி

வனி சூப்பர் கலக்குறிங்க நான் இன்னைக்குதான் பார்கிறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Superb... rellay excellent work

ஹேய் வனி.. வெளி வந்திடுச்சு.. சூப்பர்.. கொள்ளை அழகு வாழ்த்துக்கள். நான் உங்களை மீட் பண்ணும் போது எனக்கு போட்டுவிடனும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வனிதா,

சூப்பராக இருக்கு. எப்படித்தான் இவ்வளவு கிரியேடிவ் ஆன டிசைன் எல்லாம் போடறீங்க! ஒவ்வொரு படத்தையும் ரசிச்சு, ரசிச்சு, பார்த்தேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் வனிதா அக்கா! எப்படி இருக்கீங்க? நான் ஸ்ரீதேவி,அறுசுவையின் புதிய உறுப்பினர்.என்னை உங்க தங்கச்சியா நெனச்சுகோங்க!உங்க மெகந்தி டிசைன் சூப்பரோ சூப்பர் அக்கா!கண்டிப்பா இன்னிக்கி நான் ட்ரை பண்றேன்.

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

மிக்க நன்றி. //வனி என்னை கொல்லாதீங்க!// - அவ்வளவு மோசமாவா போட்டிருக்கேன் ;) மாத்தி மாத்தி நீங்களும் நானுமே குரு சிஸ்யை ஆகிக்க வேண்டியது தான். கொஞ்ச நாளா சிம்பிள் ட்ரெண்டி பேட்டர்ன்ஸ் போட்டுட்டு இருந்தேன்... உங்க டிசைன் பார்த்து தான் கை நிறைய மருதாணி போடும் ஆசையே வந்தது. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பல் வலி இப்போ பரவாயில்லையா? எனக்கு ஏதும் இது போல் விஷயத்துக்கு வைத்தியம் தெரியாதே ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நாளைக்கு பின் என் இழியில் பார்க்கிறேன்... நலமா இருக்கீங்களா? ரொம்ப நன்றி மாமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க. நான் உங்க குறிப்பு ஒன்று செய்தேன், பின்னூட்டம் கொடுக்கனும், தேடி எடுக்க நேரமில்லாம இருந்தேன். இன்னைக்கு வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா ரம்யா... வந்துட்டுது. கண்டிப்பா போட்டு விடறேன்... ஒரு கை என்ன, இரண்டு கையையும் கல்யாண பொண்ணு மாதிரி நிரப்பிடுறேன். ;) கை சிக்கினா விடுவோமாக்கும்??!! மிக்க நன்றி ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சீதாலஷ்மி... உங்களை போல் அன்பான தோழிகள், ஊக்கம் கொடுத்தா சிந்தனை வித விதமா வருது ;) அதனால் என் நன்றிகள் நம்ம தோழிகள் உங்களுக்கு தான். ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா..
உங்க கை'வண்ணமே' தனிதான். ரொம்ப அழகா இருக்குப்பா.எவ்வளவு அழகா போடுறீங்க.அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.முகப்புல பாத்ததும் பாராட்டாம போக முடியல..உங்களோட ரசிகை ஆயிட்டேன் நான்..
பாராட்டுகள் வாழ்த்துகளுடன்,
கவிதா.

anbe sivam

நீங்க சும்மா சொல்லிட்டீங்க.....வெறும் வளைவு என்று....நாங்கெல்லாம் தலையால தண்ணீர் குடித்தால் கூட போட முடியாதுனு நினைக்கிறேன். நான் சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக இதற்காகவே உங்களை சந்திக்கணும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சாமியோவ், எப்படி வனி. நான் முகப்புல பாத்துட்டு, இப்படி யாருப்பா போட்டாதுன்னு ஒரே குழப்பத்துல ஓபன் பண்ணினேன், ஏன்னா நீங்க ட்ரென்டி ஹா தான போடுவீங்க. இது உங்களது புது முகமா?? செமையா இருக்கு.வாழ்த்துக்கள் :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி டிசைன் சூப்பரு! இப்போ கோன் கைவசம் இல்லை. வாங்கிட்டு போட்டுக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கவிதா :) உங்க பின்னூட்டம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்வ்வ் வனி சூப்பரா இருக்கு அடுத்த மாதம் எங்க வீட்டுல கல்யாணம் கண்டிப்பா இந்த டிசைனை போட்டுக்க போரேன்...... ரொம்ப நன்றிப்பா உங்க டிசைனுக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. ஏன் முடியாதுன்னு நினைச்சுட்டீங்க??? முடியும்னு நினைங்க முடியும்!!! :) என்னால் முடியுதுன்னா கண்டிப்பா உங்களாலும் முடியும். சென்னை வந்தா சொல்லுங்க கண்டிப்பா சந்திப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன இப்படி கேட்டுட்டீங்க... நான் முதல்ல கொடுத்த டிசைன்ஸ் திருமணத்துக்கு போடுறது நிறைய இருக்கே அறுசுவையில் அப்பறம் தான் பார்ட்டி டிசைன்ஸ் அது இதுன்னு கொடுக்க ஆரம்பிச்சேன். தேடி பாருங்க... இருக்கு. :) ரொம்ப ரொம்ப நன்றி சுகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. வாங்கிட்டு போட்டுட்டு எனக்கு படமும் அனுப்பிடுங்க :) அப்படியாவது அந்த கையை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி சுவர்ணா... போட்டு எல்லாரும் எப்படி இருக்குன்னு சொன்னாங்கன்னும் எனக்கு சொல்லனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பதிவை நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டு இருக்கேன். இப்பதான் கண்ணில் படுது. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கண்டிப்பா தங்கை தான் :) உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. போட்டுட்டு எப்படி இருக்குன்னு அவசியம் சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி எவ்வளவு தெளிவா அழகான டிசைன் போட்டு காண்பிச்சு இருக்கீங்க. ஒவ்வொரு போட்டோவையும் மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டு இருக்கேன்.

மிக்க நன்றிங்க :) நீங்களும் போட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி. தாமதமாக பதில் அனுப்பியதற்க்கு மன்னிக்கவும். பேன்ஸி கடையில் கருப்பு மெஹந்தி கோன் விற்க்கின்றார்கள். அதில் போட்டால் கருப்பு நிற்திலேயே பிடிக்கும். இப்போதெல்லாம் கருப்பு kஓனில் பார்டர் கொடுத்து சிவப்பு கோனால் டிசைனை நிரப்புவதே புதிய fபாஷன். எனவே நாம் போடும் டிசைனின் ஒவ்வொருபகுதி அதாவது நீங்கள் போட்டிருக்கும் போட்டோவில் வரும் ஒவ்வொருபகுதியும் அந்த அவுட்லைன் , fபில்லப்ஸ் ஆகியவை தனித்தனி கலரில் எடுப்பாக தெரியும் மருதானியை கழுவிய பின்பும். try பண்ணிப் பாருங்கள். மே 25 எனக்கு 3வது திருமண நாள் வருகிறது. அப்போது நான் போட்டுக்காட்டுறேன் ஒகே வா வனி. ஈஸி தான்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஓ வாவ் வனிக்கா கலக்கிட்டீங்க எப்படி இப்படிலாம் மார்வலஸ். இப்படிலாம் உங்களால் மட்டும் தான் போட முடியும் போல. ரொம்ப அழகா இருக்கு அக்கா. அப்பறம் இன்னொரு விஷயம் அக்கா தப்பா எடுத்துக்காதீங்க. மருதாணியை எடுத்து விட்டு அப்பவே போட்டோ எடுத்து அனுப்பி இருக்கீங்களா அக்கா அக்கா ஒருமுறை அடுத்தநாள் கொஞ்சம் டார்க் ஆன அப்பறம் இருப்பது போல் எடுத்து அனுப்புங்களேன் அது இன்னும் அழகா இருக்குமே அதான் சொன்னேன்.

ஓ... கலர் ஹென்னா போட சொல்றீங்களா... நான் அந்த ரிஸ்க் எடுக்குறதில்லங்க. அது கெமிக்கல் பேஸ் என்பதால் எனக்கு சரி வராது. ரொம்ப சென்சிடிவ் ஸ்கின். நீங்களே போட்டு அனுப்புங்க, நான் பார்த்து ரசிக்கிறேன். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா