தக்காளி சூப் ரசம்

தேதி: May 7, 2011

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

வெங்காயம் - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பட்டை, சோம்பு, கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க
மஞ்சள் தூள் - 1/4 tsp
மிளகாய் தூள் + தனியா தூள் = 1/2 tsp
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
தேங்காய் - 1 tsp
பட்டை - 1 துண்டு
சோம்பு - 1/4 tsp


 

வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை கீரியும் வைத்துகொள்ள வேண்டும்.
அரைக்க கொடுத்துள்ளதை மைய்ய அரைத்துக் கொள்ளவேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி உப்பு மற்றும் எல்லா தூள் வகைகளை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
நான்கு டம்பளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து தூள்களின் பச்சை வாசம் அடங்கியதும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
ஐந்து நிமிடம் கொதித்ததும் இறக்கி நெய்யில் கருவேப்பில்லை வதக்கி கொட்டி சூடு சாதத்துடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்