எலுமிச்சை சாதம் சமையல் குறிப்பு - படங்களுடன் - 19010 | அறுசுவை


எலுமிச்சை சாதம்

வழங்கியவர் : KavithaUdayakumar
தேதி : Sat, 07/05/2011 - 16:23
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.555555
9 votes
Your rating: None

 

 • எலுமிச்சை பழம் - 1 (பெரியது)
 • வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
 • காய்ந்த மிளகாய் - 4(காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
 • கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
 • உளுந்து - ஒரு தேக்கரண்டி
 • வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
 • கடுகு - ஒரு தேக்கரண்டி
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 3
 • இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
 • கொத்தமல்லி - சிறிது
 • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
 • பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
 • ஆல் பர்பஸ் பொடி - 2 தேக்கரண்டி
 • உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப

 

முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

அதில் எலுமிச்சை கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சற்று கெட்டியானதும் ஆல் பர்பஸ் பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

தட்டில் சாதத்தை பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார்

இந்த எலுமிச்சை கரைசலை தண்ணீர் படாமல் மூன்று வாரம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்.hi

hi sister,your presentation is excellent.can u tell me what is this all purpose powder.ill try and reply...........

கவி

பார்க்கவே அழகா இருக்கு. எனக்கு இது போன்ற கலந்த சாதம்னா ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி

ஹாய் கவி நான் உடனே சித்து உடனே முடித்து விடுவேன் எலுமிச்சை தண்ணியை.உங்கள் முறைப்படி செய்து பார்கிறேன்.
பார்க்க அழஹா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கவி

நானும் பார்ட்டி சமயத்தில் இப்படி தான் செய்வேன். ஆனா அது என்ன “ஆல் பர்பஸ் பொடி” ? நான் இது போல் சேர்த்ததே இல்லையே. அதை ஏன் சேர்க்கறோம்? சொல்லுங்களேன் அடுத்த முறையில் இருந்து நானும் சேர்த்து செய்யறேன். சுவையான குறிப்பு. கலக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா

கவி பார்க்கவே அழகா இருக்கு பொடிபோட்டு செய்ததில்லை இது மாதிரி சீக்கிரம் செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

கலர்புல்லா இருக்கு sister,

கலர்புல்லா இருக்கு sister, பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கே super by elaya.G

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் எனது நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா மேடம்,வனிதா மேடம்

ரம்யா மேடம்,வனிதா மேடம்,

ஆல் பர்பஸ் பொடி என்பது ஒரு கலவை பொடி அதனை இந்த லிங்கில் பாருங்க ..கலந்த சாதம்,கூட்டு,சாம்பார்,குழம்பு என்று எல்லாவற்றிலும் இறக்கும் போது சேர்த்தால் மணமாகவும்,சுவையாகவும் இருக்கும்

http://arusuvai.com/tamil/node/15911

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா,ஹமீதா அம்மா,இளையா,

ரம்யா,ஹமீதா அம்மா,இளையா,

வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

எலுமிச்சை சாதம்

ஹாய் கவிதா,

எலுமிச்சை சாதத்துக்கு ஆல்பர்பஸ் பொடி மற்றும் தாளிதம் எல்லாம் நீங்க கொடுத்திருக்கும் விதம், நல்லா ரிச் ஆன ருசியைத் தரும், நல்லா இருக்கு உங்க செய்முறை.

மணிமுத்துமாலை