யாருக்கும் இப்படி இருந்திருக்கிறதா??????????

எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது 2ஆவது முறை 21 ஆவது வாரத்தில் அபார்ஷன் ஆனது அதற்க்கு டாக்டர்கள் Cervical Incopetence என்று சொன்னார்கள் அடுத்த முறை கரு தரித்து 12ஆவது வாரத்தில் கருப்பையின் வாய் பகுதியை தைத்து விட வேண்டும் என்று சொன்னார்கள்

இப்போது நான் கர்பம் தரித்து 27 வாரம் ஆகின்றன 12ஆவது வாரத்தில் செர்விக்ஸை தைத்து விட்டோம் இப்போது நான் முழுக்க பெட் ரெஸ்டில் இருக்கிறேன் எந்த வேலையும் செய்ய வில்லை எனக்கு 2 சந்தேகம்

1)எப்போது தைய்யலை பிரிப்பார்கள் தைய்யலை பிரிக்கும்போது மயக்கம் எதும் கொடுப்பார்களா?இல்லை சாதாராணமாக பிரிப்பார்களா?

2)எப்பொழுது நான் நடக்கலாம்?நார்மல் டெலிவெரி ஆக வாய்ப்பு உள்ளதா?

நீங்கள் இதே கேள்வியை இன்னொரு இழையிலும் கேட்டுள்ளீர்கள். அதற்க்கு நம்ப தோழிகளும் பதில் கூறியுள்ளார்கள். நீங்கள் அங்கேயே தொடர்ந்திருந்தால் பதில் சொல்ல வசதியாகவும் மேலும் பலரும் தெரிந்து கொள்ள சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்காக அந்த இழை
http://arusuvai.com/tamil/node/18886

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்