சுரைக்காய் சப்ஜி

தேதி: May 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பொடியாக நறுக்கிய சுரைக்காய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய உ.கிழங்கு - 1
தக்காளி - 1
பால் - 1/4 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
ப.மிளகாய் - 2
இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு
கிராம்பு - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்


 

சுரைக்காய், உ.கிழங்கு இரண்டையும் குக்கரில் ஒரு விசில் வேகவைத்துக் கொள்ளவும்.
அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளியை போட்டு வதக்கவும். பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும்.
அவை வதங்கிய பின் வேகவைத்தவை, உப்பு, மஞ்சள்தூள் போட்டு ஒரு கொதி வந்த பின் கெட்டியான பால் விட்டு சிறிது கெட்டியான பின் இறக்கவும்.


விருப்பபட்டால் கரம்மசாலாதூள் சேர்த்துக் கொள்ளலாம். சப்பாத்தி, பராத்தாவுக்கு சூப்பராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்