பீர்க்கங்காய் தோல் துவையல்

தேதி: June 1, 2006

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கைத் தோல் - ஒரு கப் (ஐம்பது கிராம்)
கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து - மூன்று டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - நான்கு
பெருங்காயத்தூள் - ஒரு டீ ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு டீ ஸ்பூன்


 

பீர்க்கைத் தோலை அலசி பொடியாக நறுக்கவும் .
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து சேர்க்கவும்.
பருப்பு சிவந்ததும் மிளகாய் கிள்ளிப் போட்டு வறுக்கவும்.
வாசனை வந்ததும் பெருங்காயத் தூள் சேர்த்து பீர்க்கைத் தோலை போட்டு நன்கு வதக்கவும்.
ஆற வைத்து புளி, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.


இந்த துவையல் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்