நுரையீரல் குழம்பு

தேதி: May 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

நுரையீரல் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கறி மசாலா - அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கொத்தமல்லித்தழை - 2 கொத்து,
புதினா - 2 கொத்து
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

நுரையீரலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
அதில் கறி மசாலா தூள், கொத்தமல்லித்தழை போட்டு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
பிறகு நுரையீரலை சேர்த்து நன்கு கிளறி விட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் திறந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
தேங்காய் விழுதை சேர்த்து கிளறி மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
சுவையான நுரையீரல் குழம்பு தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது குழந்தைகளுக்கு ரொம்ப ஹெல்தின்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்... நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பிடித்த குறிப்பு கொடுத்து இருக்கீங்க சூப்பர் by elaya.G