சீரகம் உளுந்து மாவுருண்டை

தேதி: May 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை உருட்டு உளுத்தம்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மண்டை வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை


 

சீரகத்தை வெறும் வாணலியில் பொரிய விட்டு எடுத்து வைக்கவும்
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுக்கவும்
மண்டை வெல்லத்தை பொடித்து வைக்கவும்
பனங்கற்கண்டை தூள் செய்து வைக்கவும்.
நெய்யை லேசாக சூடுபடுத்தி, உருக்கி வைக்கவும்.
பொரித்த சீரகத்தை, மிக்ஸியில் போட்டு, திரிக்கவும்.
வறுத்த உளுத்தம்பருப்பையும், அத்துடன் போட்டு, மாவாகத் திரிக்கவும்.
பொடித்த வெல்லத்தையும், பனங்கற்கண்டையும் இதனுடன் போட்டு, பொடிக்கவும்.
இந்த மாவை, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
ஏலக்காய்ப் பொடியை இதில் சேர்க்கவும்.
சூடு படுத்திய நெய்யை, இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.
சீரகம், உளுந்து மாவுருண்டை தயார்.


பனங்கற்கண்டுக்கு பதிலாக, வெல்லம் மட்டும் உபயோகித்துக் கொள்ளலாம்.
உருண்டையாகப் பிடிக்காமல், பொடி மட்டும் செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது, நெய் ஊற்றி, கலந்து, அப்படியே சாப்பிடலாம்.

தாய்மார்களுக்கு, உடல் நலம் தேறுவதற்கும், தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும், இந்தப் பொடியை செய்து கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

very nice receipe