வெங்காய குழம்பு

தேதி: May 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - இரண்டு கோப்பை
தக்காளி - மூன்று
பூண்டு - ஒரு கோப்பை
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - இரண்டு குழி கரண்டி
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


 

பூண்டு வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்,தண்ணீரில் புளியை தக்காளியுடன் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
ஆறிய புளி,தக்காளியை கரைத்து அதனுடன் உப்பு ,மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் தாளித்து சிவந்ததும் கருவேப்பிலை போட்டு வெங்காயம், பூண்டு சேர்க்கவும்.
பூண்டு வெங்காயம் குறைந்த அணலில் நன்றாக வதங்க வைக்கவேண்டும்.
வெங்காயம் பூண்டு நிறம் மாறும் வரை வதங்க வைக்க வேண்டும்.
பின் கரைத்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்த்து மிளகாய்த்தூள் வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.(குறைந்தது 15 நிமிடம்)
கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூடான சுவையான வெங்காய குழம்பு ரெடி...


இக்குழம்பில் தேங்காய் சேர்க்காததால் மூன்று நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.....தோசைக்கும் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

குமாரி,
உங்க வெங்காய குழம்பு செய்தேன்.ரொம்ப அருமையா இருந்தது.எல்லாரும் விரும்பி சாப்பிட்டோம்.குறிப்புக்கு நன்றி.

ஹாய் அன்பு செய்து பார்த்துட்டு மறக்காம பின்னூட்டம் தந்ததற்க்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Hi mam,

I tryed this it's very good, thanks.

nandri jai sathish

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪